கொழுப்பினை கரைக்கும் ஊற வைத்த வெந்தயம்… சர்க்கரை நோயாளிகளே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க

0 38

ஊற வைத்த வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரையினை அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ரத்தத்தில் கொழுப்பு படிவதை தவிர்க்கவும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பயன்களையும் தெரிந்து கொள்ளலாம்.

வெந்தயம் அடிக்கடி உட்கொண்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் கொழுப்பு படிவதை தடுத்து, பிற்காலத்தில் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

வெந்தய கீரைகளை அடிக்கடி உண்ண நீரழிவு ஏற்படாமல் தடுக்கும் ஏற்கனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையை கட்டுக்குள் கொண்டு வரும்.

வெந்தய தூளுடன், கஸ்தூரி மஞ்சளை கலந்து இரண்டையும் சிறிது தண்ணீர் விட்டு குழைத்து, அரிப்புகள் புண்கள் ஏற்பட்ட இடங்களில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர நோய் குணமாகும்.

வெந்தயம் ஊறவைத்த நீரையோ அல்லது வெந்தையதை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும்.

செரிமானம் ஆவதில் பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு வெந்தயத்தை நன்றாக அரைத்து விழுதாக்கி, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர செரிமான பிரச்சனைகள் நீங்கும்.

புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இதை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள புற்று நோயின் தீவிர தன்மை குறையும். பெண்கள் வெந்தயத்தை தினமும் இருவேளை உணவுகளில் உட்கொண்டு வர தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் உண்டாகும்.

Leave A Reply

Your email address will not be published.