வவுனியாவில் நான்கு பேர் பொலிஸாரால் கைது! மீட்கப்பட்ட மர்ம பொருட்கள்

0 18

வவுனியா ஆசிக்குளம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நான்கு பேரை வவுனியா பிராந்திய போதைத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு இடம்பெற்றுவருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலிற்கமைய அப்பகுதியில் சோதனைகளை முன்னெடுத்த பொலிசார் மூன்று கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

அதனை உடமையில் வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதே பகுதிகளை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.