திடீரென மாயமாகி போன முதல் கொரோனா நோயாளி பெண்; சீனா அரசு வெளியிட்ட முக்கிய தகவல்

0 16

கொரோனா வைரஸ் ஆனது சீனாவில் ஆரம்பித்து உலக நாடுகளுக்கே பரவி வந்தது. ஒரு வருட காலமாகியும் தற்போது தடுப்பூசியும் போட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சீனாவின் உகான் நகரில் ரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய ஹுவாங் யான்லிங் என்ற பெண்தான் உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார்.

சீனா அதிகாரப்பூர்வமாக கொரோனாவை ஒப்புக்கொள்வதற்கு சில மாதங்கள் முன்பே யான்லிங்க்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என கூறப்பட்டது.

மேலும், யான்லிங் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கூறப்படுவதை மறுத்துள்ள உகான் வைரஸ் ஆய்வு நிறுவனம், அவர் அந்நிறுவனத்தில் படித்து முடித்ததுமே

வேற இடத்தில் வாழவும் வேலை செய்யவும் சென்றுவிட்டதாகவும் தனது இணையதளத்தில் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து வீசாட் தளத்தில் தோன்றிய யான்லிங், தான் உயிருடன் இருப்பதாகவும், தனக்கு கொரோனா என்பதெல்லாம் பொய் என்றும் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்குப் பின் யான்லிங் மாயமாகிவிட்டார். அவர் சீனாவால் மறைக்கப்பட்டு இருக்கலாம், அதாவது ஒன்றில் அவர் வேறெங்கோ கொண்டு போய் மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம்.

அல்லது அவர் இறந்துபோய், அவரது உடல் உரகசியமாக எரிக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் உலாவருகின்றன.

ஆனால், அதெல்லாம் உண்மையில்லை எனவும், அமெரிக்கா பரப்பி விட்டுள்ள பொய்கள் என்கிறது சீனா அரசு.

Leave A Reply

Your email address will not be published.