சீனாவில் திடீரென வேகமாக கட்டப்பட்ட கொரோனா முகாம்கள்!

0 17

சீனாவில் 4 ஆயிரம் அறைகளுடன் கூடிய கொரோனா தனிமைப்படுத்தும் முகாம்கள் 138 மணி நேரத்திற்குள் கட்டப்பட்ட டைம்லாப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.

ஹெபி என்ற இடத்தில் 108 ஏக்கர் பரப்பளவில் இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 606 அறைகள் சில மணி நேரத்தில் கட்டி முடிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து ஆயிரத்து 173 அறைகளும், பின்னர் மொத்தமாக 4 ஆயிரத்து 156 அறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், ஏராளமான இயந்திரங்கள் உதவியுடன் ஈடுபட்டனர். இந்த முகாம்கள் கட்டமைக்கப்படும் டைம்லாப்ஸ் வீடியோவை சீன அரசு வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.