இரணைப்பாலையில் குடும்பஸ்தர் உடல் பற்றைக்குள் இருந்து மீட்பு!!

0 17

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை கிராம அலுவலர் பிரிவில் ஒருவர் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு, கோம்பாவிலைச் சேர்ந்த வீரப்பன் அங்கப்பன் (வயது-63) என்பவரே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இவர் நேற்றுமுன்தினம் முதல் வீடு திரும்பாத நிலையில் அவர்களை உறவினர்கள் தேடியுள்ளனர். இரணைப்பாலையில் உள்ள பற்றைக்காடான பகுதியில் நேற்றுக்காலை அவருடைய உடல் மீட்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாகக் கிராம அலுவலரால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டு உடல் மீட்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் புதுக்குடியிருப்புப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.