வவுனியாவில் 26 வயது பெண் சடலமாக மீட்பு

0 10

வவுனியா, கூமாங்குளத்தில் இளம் குடும்பப் பெண் ஒருவர் வீட்டில் இருந்து சடலமாக மீடகப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) மாலை சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 26 வயதுடையவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.