யாழ்.பருத்தித்துறையில் தாய் மற்றும் ஆறு வயது மகனுக்கு கொரோனாத் தொற்று!

0 12

பருத்தித்துறை நகரில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று திங்கட்கிழமை கண்டறியபட்டுள்ளது.

33 வயதுடைய தாயாரும் 6 வயதுடைய மகனுமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார்.

மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் இருவருடனும் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்படுவார்கள் என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்

Leave A Reply

Your email address will not be published.