சக நோயாளிகளுக்காக உயிரைப் பணயம் வைத்த மாற்றுத்திறனாளி!

0 14

ஹாங்காங்கில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக 250 மீட்டர் கட்டிடத்தில் மாற்று திறனாளி ஒருவர் வீல் சேருடன் கயிற்றில் தொங்கியபடி ஏறி நோயாளிகளுக்காக பணம் திரட்டியுள்ளார்.

ஹாங்காங்கை சேர்ந்த மலையேற்ற வீரர் லாய் சி வாய். ஆசிய அளவிலான மலையேற்ற போட்டியில் 4 முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். உலகளவில் மலையேற்ற வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 8- வது இடத்தில் உள்ளார். மலையேற்றத்தில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு கடந்த 2011ம் ஆண்டு முன்பு நடந்த கார் விபத்தில் சிக்கி இடுப்புக்கு கீழான பகுதிகள் முற்றிலும் செயலிலந்து போனது.வீல் சேர்தான் வாழ்க்கை என்றானது.

இடுப்புக்கு கீழான பகுதிகள் செயலிழந்து போனாலும் முடங்கி கிடக்கவில்லை. வீல்சேருடன் மலை ஏற தொடங்கினார். கடந்த 2015ம் ஆண்டு வீல் சேரில் உட்கார்ந்தபடியே 495 மீட்டர் உயரமுள்ள லயன் ராக் மலை மீது ஏறி சாதனைப் படைத்தார்.

தன்னைப் போன்ற மாற்றுத் திறனாளிகளுக்காக சேவை செய்ய தொடங்கினார். அவர்களுக்காக நிதி திரட்ட கடந்த 16ம் தேதி சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக 250 மீட்டர் கட்டிடடத்தில் வீல் சேரில் அமர்ந்து கயிற்றில் தொங்கியுள்ளார் லாய் சி வாய் . தனது சாகசத்தின் மூலம் முதுகெலும்பு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக 5.2 மில்லியன் ஹாங்காங் டாலர் நன்கொடையாக திரட்டினார். இது, இந்திய மதிப்பில் சுமார் 4 கோடியே 91 லட்சம் ஆகும்

தன் சாதனை குறித்து, லாய் சி வாய், ”மலையேறும் போது பாறைகள் அல்லது சிறு துளைகள் பிடிப்பதற்கு வசதியாக இருக்கும். ஆனால் கண்ணாடிகளால் சூழப்பட்ட கட்டிடத்தில் தொங்கும்போது கயிற்றை மட்டுமே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

சமூகத்தில் ஊனமுற்றவர்கள் மீது தவறான கண்ணோட்டம் உள்ளது. பலவீனமானவர்கள் என்றும், பச்சாதாபம் காட்ட வேண்டும் என்றும் நினைக்கிறார்கள். மாற்றுத்திறனாளிகளும் சாதாரண மனிதர்களைப் போலத்தான். நீங்கள் அவர்களை சமமானவர்களாக கருதி ஊக்கம் கொடுத்தாலே போதுமானது” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.