நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானது!

0 12

நாடாளுமன்ற அதிகாரிகளில் ஐவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும், பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததனர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் சகலரும் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்கள் உட்பட 463 பேர் நேற்று முன்தினம் பரிசோதனைகளில் பங்குபற்றியிருந்தனர்.

இவர்களில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பணியாளர்களுடன் நாடாளுமன்ற பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 448 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவர்களில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 12 மணிவரையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற பணியாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்டிருந்தனர். இன்றைய தினம் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.