பிரான்ஸில் 6 மணிமுதல் ஊரடங்கு! புதிய அனுமதிப்பத்திரம்!

0 23

பிரான்ஸில் நாளை சனிக்கிழமை முதல் மாலை 6 மணிமுதல் ஊரடங்கு நடைமுறைக்கு வருகின்றது.

குறிப்பிட்ட சில மாவட்டங்களுக்கு மாத்திரமே நடைமுறையில் இருந்த இந்த சட்டம், நாளை சனிக்கிழமை (ஜனவரி 16) முதல் நாடு முழுவதும் கொண்டுவரப்படுகின்றது. இந்த ஊரடங்கு நடமுறையில் இருக்கும் 12 மணிநேரங்களில் (மாலை 6 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணி வரை) வெளியில் பயணிப்பதற்கு அனுமதி பத்திரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு நேரத்தில் போதிய அனுமதி பத்திரம் இன்றி பயணிப்போருக்கு €135 யூரோக்கள் தண்டபணமும், அடுத்த 15 நாட்களுக்குள் இரண்டாம் முறை மீறுவோருக்கு €200 யூரோக்களும், அடுத்த 30 நாட்களுக்குள் அதே தவறை மீண்டும் செய்தால் € 3,750 யூரோக்களும் தண்டப்பணமாக அறவிடப்படும்.

இந்த புதிய ஊரடங்கு நேரத்தில் நீங்கள் வெளியே பயணிக்க அத்தியாவசியமான ‘அனுமதி பத்திரத்தை’ அரசு வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.