இந்தோனேசியாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்… கூட்டம் கூட்டமாக வெளியேறும் மக்கள்!

0 0

சுலவெசி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் மெஜீன் நகரில் இருந்து வடகிழக்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.
இந்தோனேசிய பேரிடர் மீட்பு துறை வெளியிட்டுள்ள தகவல்படி, ஆரம்பகட்டமாக மெஜீன் நகரில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், 637 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பிறகு மமுஜு மாகாணத்தில் மூன்று பேர் பலியானதாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. நள்ளிரவு 1 மணிக்கு நிலநடுக்கம் தாக்கியதில் சுமார் 60 வீடுகள் இடிந்து விழுந்தன.

ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் என பேரிடர் மீட்பு துறை தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் தொடங்கி ஏழு நொடிகளுக்கு மிகவும் பலமானதாக உணரப்பட்டதாக கூறுகின்றனர்.

எனினும், சுனாமி எச்சரிக்கை இல்லை என இந்தோனேசிய அரசு தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் கூட்டம் கூட்டமாக வேறு இடங்களுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.