யார் இந்த லிசா? அமெரிக்காவையே அதிரவைத்த கொடூர கொலையாளி

0 31

அமெரிக்க வரலாற்றில் கடந்த 67 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த லிசா மோண்ட்கோமரி என்ற 52 வயது பெண், கர்ப்பிணி பெண் ஒருவரின் குழந்தையை திருடுவதற்கு திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அந்த கர்ப்பிணி பெண்ணை கொலை செய்துவிட்டார் லிசா.
லிசாவுக்கு குழந்தையின்மை பிரச்சினை இருந்ததால், பாபி ஜோ என்ற கர்ப்பிணி பெண்ணை கொலை செய்ய திட்டம் தீட்டியிருக்கிறார்.

பாபி ஜோ நாய்களை வளர்த்து விற்பனை செய்து வந்துள்ளார்.எனவே, நாய் வாங்கும் வாடிக்கையாளர் போல் பாபி ஜோவிடம் சென்று, கர்ப்பிணி பெண் என்றும் பாராமல், அவரின் கழுத்தை நெரித்து, உடலை வெட்டி குழந்தையை வெளியே எடுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார்.

2007ஆம் ஆண்டில் லிசா கைது செய்யப்பட்டார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். இவ்வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அவருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது.இதையடுத்து, நேற்று லிசாவுக்கு உயிரை கொல்லும் ஊசி போடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க நேரப்படி நேற்று நள்ளிரவு 1.31 மணிக்கு லிசா மோண்ட்கோமரி இறந்துவிட்டதாக அமெரிக்க நீதித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.