’ விஜய்க்கு’’ வாழ்த்து தெரிவிக்காமல்… புதிய பாடலுக்கு வாழ்த்து தெரிவித்த சூர்யா

0 28

மாஸ்டர் படம் வரும் 13 ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் அதை சிறப்பாக கொண்டாடத்திட்டமிட்டு வருகின்றனர். நிச்சயம் இதன் டிக்கெட் விற்பனை சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஒரு மணிநேரக் காட்சி நேற்றிரவு வேளையில் இணையதளத்தில் ரிலிஸாகி வைரலானது. ஆனால் மாஸ்டர் பட இயக்குநர் லோகேஷ், அனிருத் இதை ஷேர் செய்ய வேண்டாமெனக் டுவீட் பதிவிட்டனர்.இந்நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாத்துறையில் இளம் நடிகர்கள், நடிகைகள் விஜய்யின் மாஸ்டர் படத்தை திரையில் பார்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.இந்நிலையில், நாளை இப்படம் ரிலீஸாகவுள்ள நிலையில் பெரிய நடிகர்கள் யாரும் விஜய்க்கு வாழ்த்து கூறவில்லையென நெட்டிசன்ஸ் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில், ராம் இசையில், பிரிந்தா சிவக்குமாரின் தயாரிப்பில்’’ செங்காட்டுல’’ என்ற பாடலை வெளியிட்டு இது வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.ஆனால் தெலுங்கு சினிமாவைப் போல் முன்னணி நடிகர்கள் ஒருவருக்கொருவர் அவர்களின் படங்களின் வெளியீட்டின் போது மற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில்லை என நெட்டிசன்ஸ் கூறிவருகின்றனர்.ஒருவேளை முன்னணி நடிகர்கள் பொதுவெளியில் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் இதுகுறித்த வாழ்த்துகளை பெர்ஷனாக தெரிவிப்பார்கள் எனவும் ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் விஜய் , சூர்யா இருவரும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.