பருத்தித்துறையில் கொரோனா தொற்று – அவச்சாவு

0 71

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்றாளர் ஒருவரின் குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

பருத்தித்துறை புலோலி பகுதியில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றது

அண்மையில் அந்தப் பகுதியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவரது சகோதரன் உள்ளிட்ட சிலர், தொற்றாளரின் பெற்றோரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பெற்றோர் அயல்வீட்டில் வசித்து வந்தார்கள்.

நேற்று அவர்களிற்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

உயிரை மாய்ப்பது பிரச்சனைகளிற்கு தீர்வல்ல என்பதுடன், குடும்ப உறவினர்களை தீராத இழப்பின் வலிக்குள் தள்ளும். வடமாகாணத்தில் மனஅழுத்தம் உள்ளவர்கள் அபயம் தன்னார்வ அமைப்பிற்கு அழைப்பேற்படுத்தலாம்.

Leave A Reply

Your email address will not be published.