தோசை தொண்டையில் சிக்கி குடும்பஸ்தர் பரிதாபமாக பலி

0 20

தோசை உண்ட குடும்பஸ்தருக்கு தொண்டையில் தோசை சிக்கி மயங்கி விழுந்த நிலையில் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரியவருகிறது. உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி பார்த்திபன் வயது 32 என போலீசார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. தொண்டையில் தோசை சிக்கி அவதிப்பட்ட அவர் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். விசாரணை போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.