திருகோணமலையில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதி!

0 25

திருகோணமலை மாவட்டத்தில் தற்போது வரைக்கும் 179 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஏழு மாத குழந்தை உட்பட 13 பேர் புதிதாக இனங் காணப்பட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கடந்த 4ஆம் திகதி 106 பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ஜமாலியா- சிறிமாபுர,ஜயவிக்ரமபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது 7 மாத குழந்தைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார பணிப்பாளர் வீ.பிரேமானந் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.