திருமுறியான்பதி’ மீள் உருவாக்க கிராம அங்குரார்ப்பண நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் புதிய கிராமம்

 ” திருமுறியான்பதி” கிராமத்தின் மீள் உருவாக்க அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றைய தினம் (28.07.2023) மு.ப  10.30 மணியளவில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களால்  ஆரம்பித்துவைக்கப்பட்டது.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள திருமுறுகண்டி மற்றும் இந்துபுரம் கிராமங்களில்  65 குடும்பங்கள் இருப்பதற்கு காணிகள் வீடுகள் இன்றி அல்லல்ப்பட்டு வந்தனர். 

இவற்றை சீர் செய்திடும் நோக்கில் குறித்த குடும்பங்களுக்கு 0.5 ஏக்கர் வீதம் கொக்காவில் பகுதியில் காணி வழங்கப்பட்டுள்ளது. தற்போது 55 குடும்பங்கள் தற்காலிக ஓலைக்குடில் அமைத்து  வாழ்ந்துவருகின்றனர்.

இவர்கள் பௌதீக அடிப்படைக் கட்டுமானங்கள் எதிவுமின்றி வாழ்ந்துவரும் நிலையில் ” புனர்வாழ்வு புதுவாழ்வு ” அமைப்பின் பூரண நிதிப் பங்களிப்பில் அரைநிர்மாண வீட்டுத்திட்டமும்,அனைவருக்கும் மலசலகூடமும், 5 பொதுக் கிணறுகளும் அமைத்துக் கொடுக்கும் ஆரம்ப நிகழ்வாக இந் நிகழ்வு அமைந்தது.

இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் (காணி ), மாவட்ட பதில் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி  ஜெயபவாணி, ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் திருமதி. ப.ஜெயராணி, புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்பின் தலைவர் கலாநிதி திரு. சர்வேஸ்வரன், திட்டமிடல் உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tagged in :

Admin Avatar