Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Death

முள்ளியவளை புதறிகுடா நீர்தேக்கத்தில் இருந்து உடலம் மீட்பு!

முல்லைத்தீவு முள்ளிவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து உடலம் ஒன்று இன்று 04.05.2024 மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை புதறிகுடா நீர்தேக்கத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் உடலம் காணப்படுவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று இரவு குறித்த பகுதிக்கு சென்ற பொலீசார் உடலத்தினை மீட்டுள்ளார்கள். தண்ணீரூற்று கிழக்கு…

மல்லாவியில் இடிமின்னல் தாக்கி ஒருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம்!

மல்லாவியில் இடிமின்னல் தாக்கி ஒருவர் பலி- மேலும் ஒருவர் படுகாயம் முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற இடிமின்னல் தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் மழை பெய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மரத்தின் கீழே நின்றிருந்தவர்கள் மேலே இடி விழுந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் சம்பவத்தில் ஜயங்கன்குளம்…

நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம் ஒருவர் மீட்பு!

முல்லைதீவு நாயாற்று பகுதியில் கடலில் குளித்தவர்களில் ஒருவர் மாயம் ஒருவர் மீட்பு! முல்லைத்தீவு நாயாரறு கடல் பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவினர் இன்று 28-04-24 மாலை கடலில் நீராடிக் கொண்டிருந்துள்ளார்கள் இதன்போது ஒரு இளைஞனை கடலில் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில்…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா தொடர்பிலான முன்னாயத்த கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற 20.05.2024 திங்கள் அன்று நடைபெறவுள்ளது.  இதற்கான ஒழுங்கமைப்பு வேலைத்திட்டத்தினை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்னின்று மேற்கொண்டு வருகின்றது. ஆலயப் திருப்பணி வேலைகளை…

ஊடகவியலாளரின் நடவடிக்கைக்கு எதிர்பு தெரிவித்த அரச உத்தியோகத்தர்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவரின் நடவடிகைக்கு எதிராக ஒட்டுசுட்டான் பிரதெச செயலக ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். 22.04.2024 இன்று மாலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் ஊழியர் நலப்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் ஒட்டுசுட்டான் பிரதே செயலத்திற்கு முன்பாக திரண்ட பிரதேச செயகல ஊழியர்கள் அனைவரும் கவனயீர்ப்பினை வெளிக்கொண்டுவந்துள்ளார்கள். ஊடக தர்மத்தினை தனிநபரின் சுயலாபத்திற்கு பயன்படுத்துவதா,கௌரவமான…

முறைசாராத் தொழிலாளர்களுக்கு தகமை சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி பி.ப 01.00 மணிக்கு கருசரு நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் முறைசாரத் தொழில்களில் ஈடுபடவுள்ள தொழிலாளர்களுக்கு இலவசமாக தொழிற் தகமை சான்றிதழ் வழங்குதல் நிகழ்வு நடைபெறவுள்ளது நாடளாவியரீதியில் மாவட்ட மட்டத்தில் நடாத்தப்படும் “GLOCAL FAIR”“GARUSARU” நிகழ்ச்சித் திட்டம்.. முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு…

கணவன் மாரடைப்பால் உயிரிழந்த செய்தி கேட்டு மனைவி தற்கொலை!

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று (18.04.2024 ) மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, நெடுங்கேணி, 6ம் கட்டை பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் அவசரமாக நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்….

புதுக்குடியிருப்பில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் படுகாயம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேவிபுரம் ஆ பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் கட்டுத்துவக்கு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுயாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 33 அகவையுடைய குடும்பஸ்தர் இவர் மயில்குஞ்சன் பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார். இவர் காட்டிற்குள் சென்றவேளை காட்டிற்குள் விலங்குகளை வேட்டையாடுவதற்காக கட்டப்பட்ட கட்டுத்துவக்கு…

கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

கடலில் கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்பு! முல்லைத்தீவு மாவட்டத்தில் கடத்தொழிலுக்குச் சென்ற கடற் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் படகிலிருந்து உடலமாக மீட்கப்பட்டுள்ளார். 17-04-24 மாத்துடன் பகுதியில் வசித்து வரும் 45 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் நேற்று இரவு கடத்தொழிலுக்குச் சென்ற நிலையில் அவர் கரை திரும்பாத நிலையில் அவரைத் தேடி ஏனைய படகில்…

முல்லைத்தீவில் 40 ற்கு மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்ட பாரிய வேலைத்திட்டம்!

முல்லைத்தீவில் தங்கள் சேவைகளை அமைச்சருக்கு பட்டியலிட்ட அரசா சார்பற்ற நிறுவுனங்கள்! முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது செயற்பட்டுக்கொண்டிருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் கௌரவ திரு டக்ளஸ் தேவானந்தா நிறுவன அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாலில் ஈடுபட்டார். இன்றைய தினம் (17) முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் குறித்த…