Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

ஜரோப்பிய நிதி உதவியில் கட்டப்பட்ட கடைத்தொகுதியினை வசதி படைத்தவர்களுக்கு வழங்கிய புதுக்குடியிருப்பு பிரதேச சபை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு பொது சந்தையில் ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியில் அந்த நிலத்தில் வாடகை செலுத்தி வந்த உள்ளுர் வணிகர்களை எழுப்பிவிட்டு கட்டப்பட்ட கடைத்தொகுதியினை பெருந்தொகை செலுத்தி வசதி படைத்தவர்களுக்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஏலத்தில் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட உள்ளுர் சிறு வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பொது சந்தையில் கடந்த சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறு வணிக நிலையம் நடத்தி வந்தவர்களை புதுக்குடியிருப்பு பிரதேச சபை பாதிக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் கவலை தெரிவத்துள்ளார்கள்.

போரிற்கு பின்னர் தகர கொட்டகைகள் அமைத்து சிறு புடவை வணிபம்,உள்ளுர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து வந்த வணிக நிலையங்கள் மூன்றினை அபிவிருத்தி செய்து கடை கட்டி தருவதாக தெரிவித்து அவர்களை அந்த இடத்தில் இருந்து எழுப்பி விட்டு தற்போது ஜரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவிமூலம் 2022 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் அளவில் அதில் இருந்த வணிக நிலைய உரிமையாளர்களை வைத்தே நாள் கல்லு வைத்து விட்டு தற்போது சந்தை வணிகத்துடன் சம்மந்தப்படாத பெரும் வணிகம் செய்யும் வியாபாரிகளுக்கு  ஏலத்தில் விட்டுவிட்டார்கள்.

மாகாணசபைகள் உள்ளுராட்சி விவகாரங்கள் இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ளுராட்சி மேம்பாட்டு ஆதரவு திட்டம் எனும் திட்டத்தில் வரிவிலக்காக 57 இலட்சத்தி 86 ஆயிரத்தி 274 ரூபா செலவில் அமைக்கப்பட்ட மூன்று கடைத்தொகுதிகளும் கட்டப்பட்டு அதில் வணிகம் செய்து வந்தவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட போதும் அதிகளவான விலையினை பிரதேச சபை கோரியுள்ளதால் தங்களால் அவ்வாறு செலுத்தமுடியவில்லை என கவலை தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட நிலையில் பல தசாப்தங்களாக சிறு வணிகர்களாக சந்தைக்குள் இருந்து வியாபாரம் செய்து வந்த இந்த வணிகர்களை ஊக்கப்படுத்தாது பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை விற்பனை செய்துவரும் குடும் பெண்ஒருவர் இன்று எந்த வணிக நிலையமும் அற்ற நிலையில் பிரதேசசபை போட்டுக்கொடுத்த வெளிக்கொட்டகையில் வைத்து வியாபாரம் செய்து வருகின்றார் மற்றையஇரண்டு புடவை வியாபாரிகளும் வியாபாரம் வீழ்ச்சி கண்ட நிலையில் தகரக்கொட்டகைளில் சந்தை வளாகத்தில் வைத்து வணிகம் செய்து வருகின்றார்கள்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான வருமானத்தினை மக்களின் வரிப்பணத்தினை பெற்றுக்கொடுக்கும் சந்தைகளில் ஒன்றாக புதுக்குடியிருப்பு சந்தை காணப்படுகின்றது.சந்தைக்குள் சுமார் 20 வரையான சிறுதொழில் முயற்சியாளர்கள் வணிக நிலையங்கள் நடத்தி வருகின்றார்கள் அவர்களிடம் மாதாந்த வாடகையினை பிரதேச சபை பெற்று வருகின்றது.

நாளாந்தம் கூலி தொழிலாக ஏதோ தங்களால் இயன்ற முதலீடுகளை வைத்துக்கொண்டு சந்தையில் வியாபார கடைகளை குறைந்த வாடகையில் எடுத்து வியாபாரம் செய்து வரும்வியாபாரிகளுக்கு பாரிய இடியாக தலையில் இடிவிழுந்ததாக பெரிய முதலீட்டுடாளர்கள் புதிதாக கட்டப்பட்ட புதிய மூன்று கடைகளையும் சுமார் தலா  17 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் எடுத்துள்ளமை சிறு வியாபாரிகளின் வியாபாரத்தில் வீழ்ச்சியினை ஏற்படுத்தும் என்பது வியாபாரிகளின் கருத்து

ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக குறித்த பகுதியில் இருந்த மூன்று வியாபாரிகளின் வியாபாரம் வீழ்ச்சியினை கண்டுள்ள நிலையில் அந்த இடத்தில் புதிய பாரிய முதலீட்டுடன் வணிக நிலையங்ககாள சந்தைக்குள் வருமாக இருந்தால் அது சந்தையில் உள்ள சிறு வணிகநிலையங்களை நடத்துபவர்களின் கதி என்வாகும்?

இந்த நிலையினை மாற்றி சந்தையில் பாரம்பாரியமாக வணிகம் செய்து வந்தவர்களுக்கு ஏதோ குறைந்த வாடகையில் வழங்கவேண்டும் என பலதடவைகள் வணிகர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது அதனை பிரதேச சபை கண்டுகொள்ளவில்லை சட்டம் என்று சொல்லியும் உள்ளுராட்சி மன்ற ஆணையாளரின் முடிவு என வணிகர்களுக்கு பிரதேச சபை தெரிவித்துள்ளது.

இவ்வாறு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தி என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியினை பெற்று போரால் பாதிக்கப்பட்ட இந்த வணிகர்களை மேலும் பாதிக்க செய்யும் செயற்பாடாக இது அமைந்துள்ளது.

இந்த விடையம் தொடர்பில் சந்தை வணிகர்களால் சம்மந்தப்பட்ட திணைக்களம் அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை  என பாதிக்கப்பட்ட வணிகர்கள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இந்த விடையத்தில் உரிய கவனம் செலுத்தி மக்களுக்கான அபிவிருத்தியினை கொண்டுசெல்வதில் பாராபட்சம் பார்க்காமல் நடந்து கொள்ளவேண்டும்

இதற்கிடையில் புதுக்குடியிருப்பு சந்தை வணிகர்கள் மற்றும் வணிகர்கள் ஒன்றினைந்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஆர்ப்பபாட்டம் ஒன்றினை நடத்த முற்பட்ட வேளை பதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட இருவர் பிரதேச சபையுடன் கதைத்து பேசி ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு சென்றுள்ளார்கள் அவர்களுக்கு பிரதேச சபையினால் வழங்கப்பட்ட வாக்குறுதிதான் என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது?

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *