Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

யாழில் போன் பாவிக்க தடை- முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் நடைமுறைப்படுத்தப்படுமா?

யாழ் போதான மருத்துவமனையில் கடமைநேரத்தில் ஸ்மாட் போன்களை பாவிப்பதற்கு தடைசெய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்படவேண்டும் என நோயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் நோயாளர்கள் செல்லும்போது இவ்வாறான தொலைபேசி பாவனையினால் பாதிக்கப்பட்ட பல நோயாளர்கள் காணப்படுகின்றார்கள்.இதனை கருத்தில் கொண்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்படவேண்டும் என நோயாளர்கள் தெரிவித்துள்ளார்கள்

கடமை நேரத்தில் தாதியர்கள் , சுகாதார உதவியாளர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் ஆகியோர் ஸ்மார்ட் போன் பாவிக்க யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தடை விதித்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு தவறான முறையில் ‘கானுலா’ பொறுத்தப்பட்டமையால் , சிறுமியின் இடது கை மாணிக்கட்டுடன் அகற்றப்பட்டுள்ளது. அது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் , தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் ,குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் பணிப்பாளர் ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையிலும் இவ்வாறான பல கவனக்குறைவுகள் இடம்பெற்று வருகின்றமையினை நோயாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *