Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

முல்லைத்தீவில் ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவினர் 120 பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவி!

பெண்கள் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அவசரகால நிவாரணக் வழங்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் பிரிவின் முக்கிய கலந்துரையாடல் இன்றையதினம் (20.06.23 ) காலை 9.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு , வெலிஓயா பிரதேச செயலகத்திற்குட்பட்ட 120 பெண் தொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பயிற்சிகளையும் உதவிகளையும் வழங்கி பெண்களை பொருளாதாரத்தில் ஒரு ஸ்திர தன்மையில் வைத்திருக்கும் நோக்கி இந்த  செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளார்கள்.

பெருளாதார அபிவிருத்தியில் பெண்களை வலுவான நிலையில் வைத்திருக்கும் நோக்குடன் இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வாழ்வாதார உதவி மற்றும் சுகாதார உதவி , திறன்விருத்தி, வியாபார நுட்பங்களை கற்றுக் கொடுத்தல், இணையவழி வியாபார நடைமுறை நுட்பம் முதலான விடயங்களை பெண் தொழில் முயற்சியாளர்களக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் பிரிவின் திட்ட அதிகாரி நெமானிகா அமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபை பெண்கள் பிரிவின் திட்ட அலுவலகர் பிரதீபா கலசேகர,  முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் லிசோ கேகிதா, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்  திருமதி.உமாகமள், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயகாந்த், வெலிஓயா பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர், துளுயுஊ நிறுவனத்தின் இணைப்பாளர் மற்றும் முகாமையாளர், பெண்கள் அபிவிருத்தி மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பயனாளர்கள்  எனப் பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *