Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் 375 மக்கள் இலவச மூக்கு கண்ணாடியினை பெற்றுக்கொண்டுள்ளார்கள்!

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 1995 ஆம் ஆண்டு க பொ.த.சாதரணதர மாணவர்கள்  தாய்த் தமிழ் பேரவை, மற்றும் விதுர்ஷனா அறக்கட்டளையின் ஒழுங்கமைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் இலவச கண்பரிசோதனை மற்றும்  இலவச மூக்குகண்ணாடி வழங்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது

அந்த வகையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி 1995 ஆம் ஆண்டு க பொ.த.சாதரணதர மாணவர்களான முருகுப்பிள்ளை-பிரதாபன், சிறிகாந்தன்-சுகிர்தன்,சின்னையா-நாகேஸ்வரன்,சாம்பசிவம்-சபேசன், இராசநாயகம்-பிறின்சன்,வீரபாகு -திலீபன்,நவரெத்தினம்-சதீசன்,ஆகியோரின் நிதி அனுசரனையிலும் 35,0000/= ( மூன்றுலட்சத்து ஐம்பதாயிரம்)   தாய்த்தமிழ் பேரவையின்  நிதி  அனுசரனை ரூபா 40000/= (நாற்பதாயிரம்)  விதுர்ஷனா அறக்கட்டளையின் நிதி அனுசரனை ரூபா  40,000/= (நாற்பதாயிரம்) என   மொத்தமாக ரூபா  43.0000/= ( நான்குலட்சத்து முப்பதாயிரம்) நிதியுதவியில்  புதுக்குடியிருப்பு பிரதேசத்தில்  375 மக்களுக்கான  கண்பரிசோதனை மேற்க்கொண்டு  இலவச மூக்கு கண்ணாடி வழங்கி வைக்கப்பட்டது


புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட  குறித்த நிகழ்வானது தாய்த் தமிழ் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு த.நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் 1995  ஆம் ஆண்டு  க பொ.த சாதாரணதர  மாணவர்களின்  ஓய்வு பெற்ற அதிபர் பிரதிக் கல்விப் பணிப்பாளர்  ச.நாகரெட்ணம், ஓய்வு பெற்ற அதிபர் க.சிவலிங்கம் , இம்மாணவர்களுக்கு கல்வி கற்பித்த அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அக்காலப்பகுதி மாணவர்களான திரு த.பிரதீபன், நா.கஜேந்திரன்  தெ.மங்களேஸ்வரன், திரு சி.குகநேசன்,  மற்றும்  புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி  வைத்திய கலாநிதி ப.பரணீதரன் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி. ம.கெங்காதீஸ்வரன் புதுக்குடியிருப்பு  முல்லைத்தீவு  மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர்,புதுக்குடியிருப்பு  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி M.B.R கேரத் , உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *