Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும்!

புதுக்குடியிருப்பில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகமும் போதைவஸ்து பாவனையும் கட்டுப்படுத்த கோரி கவனயீர்ப்பும் மனு கையளிப்பும்!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவர் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரி கவனயீர்ப்பு பேரணியும் மனுகையளிப்பு நடவடிக்கையும் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

24.08.23 இன்று காலை புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காருண்யம் சிறுவர் அபிவிருத்தி நிலையம் மற்றும் மல்லிகைத்தீவில் இயங்கிவரும் சிறுவர்களின் போசாக்கு அபிவித்தி நிலையம்  ஏற்பாட்டில் இந்த கவனீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

புதுக்குடியிருப்பு பிரசேத சபை முன்பாக இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு பகுதியில் இருந்து ஆரம்பமான கவனயீர்ப்பு பேரணி ஒன்றும் புதுக்குடியிருப்பு சந்தியினை சென்றடைந்து அங்கிருந்து கவனயீர்ப்பினை வெளிப்படுத்தியவாறு புதுக்குடியிருப்பு பிரதேச செயலம் சென்றடைந்து அங்கு சிறுவர்களின்  பாதுகாப்பினை உறுதி செய்யகோரியான கோரிக்கைகள் அடங்கிய மனு வாசிக்கப்பட்டு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது
இதில் சுமார் 500 வரையான சிறுவர்கள் பெரியவர்கள் வரை கலந்து கொண்டுள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அதிகரிக்கும் சிறுவர் துஸ்பிரயோகத்தினை கட்டுப்படுத்த கோரி புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் அவர்களிடம் மனு கையளிக்கப்பட்டுள்ளது

குறித்த மனுவில்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடலியல் மற்றும் உணர்வு ரீதியான சிறுவர் துஸ்பிரயோகம் அண்மைக்காலமாக அதிகளவில் அதிகரித்து வருவதை நாம்  அவதானித்துவருகின்றோம் போதைப்பொருள் பாவனையாலும்,விற்பனையாலும்,குடும்பங்களில் பிரச்சினைகள் தலைதூக்குவதாலும் சிறுவர்கள் மகிவாக வாழக்கூடிய சூழலை இழந்து உள ரீதியான நெருக்கடியை சந்திக்கின்றார்கள் இதானல் இவர்களின் கல்வி பெறுபேறுகள் குறைவாக காணப்படுவதால் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த பிரதேசத்தில் பாலியல் ரீதியான துஸ்பிரயோகமும் போதைப்பொருள் உற்பத்தியும் அதிகளவில் காணப்படுவதும் இதனால் ஏற்பட்ட விளைவுகள் பாராதூரமானதென்பதும் வெளிப்படையாக தெரிந்த போதிலும் உரியவர்கள் அநேக சந்தர்பங்களில் சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் மேலும் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து நம் சிறுவர்கள் மிகவும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்படுவதோடு நம்பிக்கைக்குரியவர்களாலேயே பாலியல் தீண்டல்களுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

உள்ளிட்ட கோரிக்கை அடங்கிய மனு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மனுவினை புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெறும் சிறுவர் துஸ்பிரயோகம் பேதைவஸ்து பாவனைகளை உடனடியாக கட்டுப்படுத்த கோரியான மனுக்கள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும்,முல்லைத்தீவு சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *