Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

நாட்டை விட்டு வெளியேற தயாராகும் பெருமளவான புத்திஜீவிகள்!

நாட்டில் உள்ள வைத்திய நிபுணர்கள்,வைத்திய அதிகாரிகள் 5000 பேர் மிகவிரைவில் வெளியேற தயாராகி இருக்கின்றார்கள் 20 ஆயிரம்வைத்தியர்கள் இருக்கின்ற நாட்டில் தற்போது 15 ஆயிரம் வைத்தியர்கள்தான் கடமையாற்றவுள்ளார்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருக்கும் 1500 விரிவுரையாளர்கள் உத்தியோகத்தர்கள் என்று கடமை புரியும்நிலையில் ஏறக்குறைய 800 பேர் வரையில் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றார்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

14.09.23 அன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளதுடன் நாட்டின் ஏனைய விடையங்கள் தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்..

மீண்டும் கோட்டபாஜய றாஜபக்ச வின் அரசியல் பிரசன்னம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

கோட்டபாய றாஜபக்ச மீண்டும் அரசியலுக்குள் வருவதென்பது ஒட்டுமொத்தமாக இலங்கை மக்கள் அவரை நிராகரித்துள்ளார்கள் தேர்தலில் அவரை ஆதரித்தாலும் கூட பின்பு அவர் மக்களின் போராட்டத்திற்கு அஞ்சி தப்பி சென்றவர் மீண்டும் அரசியலில் வருவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல அதே கட்சியினை சேர்ந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூறியது போன்ற ஒரு கோமாளித்தனமான நடவடிக்கையாகத்தான் இருக்கும்.

கோட்டபாய மட்டுமல்ல அவர்களின் கட்சியாக இருக்கலாம் அவர்களின் குடும்பின்னணியினை சேர்ந்தவர்களாக இருக்கலாம் அவர்களை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதரிக்கக்கூடிய சூழ்நிலை இனிமேல் குறி;ப்பிட்ட காலங்களுக்கு வரப்போவதில்லை அவரின் இந்த முடிவு கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பினை கொண்டுவரும் நிலையில் சிறுபான்மையினத்தவர்கள் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பிலான பரபரப்பான சூழ்நிலையில் சணல் 4 வெளியிட்ட தகவல் அடிப்படையில் அவர்கள் இனி அரசியல் செய்வதற்கு தகுதியற்றவர்கள் என்று நிருபித்திருக்கின்றது.

அனேகமாக அந்த விடையம் மிகவிரைவில் பிரிட்டிஸ் அரசாங்கம் கூடா இது சம்மந்தமான தெளிவான விளக்கத்தினை கொடுக்க இருக்கின்றது.

(சணல்-4)இவ்வாறு தப்பிக்கமுடியாத நிலை இருக்கும் போது இவர்கள் அரசியலுக்கு மீண்டும் கோத்தபாஜ றாஜபக்ச வருவது என்பது ஒரு வெகுளித்தனமான கருத்தாக இருக்கின்றது.
ஒட்டுமொத்தமாக இங்குள்ள மக்கள் கோட்டபாயறாஜபக்ச ஒரு பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கூட அனுமதிக்கமாட்டார்கள் என்பது எங்களின் நிலைப்பாடாக இருக்கின்றது.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் சணல் 4 வெளியிட்டுள்ள விடையத்தில் பல உண்மையான விடையங்கள் உலகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்னர் இவ்வாறு தெரியப்படுத்தப்படவில்லை  ஆகவே இந்த விடையத்தில் இலங்கை அரசாங்கத்தின் மீது எங்களுக்கு மாத்திரமல்ல இங்கள்ள அனைத்து அமைப்புக்கள் சர்வதேச ரீதியாககூட இருக்கின்ற அமைப்புக்கள் சமாதானத்திற்கான நீதிக்கான அமைப்புக்கள் இன்று சர்வதேச விசாரணை தேவை இலங்கை அரசாங்கம் எந்த விசாரணைக்குழுக்களை போட்டாலும் ஆணைக்குழுக்களை நியமித்தாலும் அது அரசிற்கு ஆதரவாக போகுமே தவிர நிச்சயமாக உண்மை வெளிவரப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

அந்தவகையில் சர்வதேச விசாரணையினைதான் ஒட்டுமொத்த தமிழ்;இனம் எதிர்பத்திருக்கின்றது.

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையினை நாங்கள் கோரியபோது இங்குள்ளு ஏனைய தரப்புக்கள் யாருமே சர்வதேச விசாரணையினை கோரவில்லை இன்று ஈஸ்டர் குண்டு தாக்குதல் சம்பவமும் அதன்பின்னர் சணல் 4 காணொளியும் வெளிவந்ததன் பின்னர்தான் உண்மையில் சர்வதேச விசாரணையினை எல்லோரும் கோருகின்றார்கள்.

நாங்கள் ஒவ்வொரு படுகொலைகளுக்கும் ஜனநாயத்திற்கு முரணான மனித உரிமைகள் மீறிய ஒவ்வொரு படுகொலைகளுக்கும் சர்வதேச விசாரணைதான் தேவை என்பதை கேட்டுக்கொண்டிருக்கின்றேம்.
இப்போது ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவேண்டும் என்பதற்காக சர்வதேச விசாரணையினை கோருகின்றார்கள்.

ஜெனீவா மனிதஉரிமை கூட்டத்தொடரில் கூட இந்த விடையம் உள்வாங்கப்பட்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளக விசாரணைகள் மூலம் தீர்வினை பெற்றுத்தரமுடியாது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியினை பெற்றுத்தரமுடியாது என்ற நிலமை இன்று வந்துள்ளது.

இந்த நிலையில் சர்வதேச விசாரணைதான் தேவை என்று எல்லா பக்கங்களிலும் இருந்து வருவதனால் அந்த விசாரணைக்கு அரசாங்கம் செல்லவேண்டும் அதைவிடுத்து குழுக்கள் அமைத்து காலத்தினை கடத்தி அதன் ஊடாக அதனை இல்லாமல் செய்துவிடுவார்கள்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் சிங்களத்தரப்பினை சிங்களத்தரப்பினை வெல்ல வேண்டும் என்பதற்காக சிங்கள தரப்பின் ஆதரவினை பெறவேண்டும் என்பதற்காக சர்வதேசத்திடம் இந்த பிரச்சினையினை கொடுக்கமுடியாது எங்களின் நிபுணர்களை கொண்டு இங்கே உள்ளவர்களை கொண்டு நாங்கள் கட்டறிவோம் என்று ஜனாதிபதி கொண்டுவருன்ற இந்த விடையத்தில் கூட சிங்களத்தரப்பினை தனக்கு சார்பாக கொண்டுவரும் மறைமுக திட்டமாகத்தான் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

இலங்கையில் புத்திஜீவிகள் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பிலும் கருத்து தெரிவித்துள்ளார்.

1500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளார்கள் வைத்திய நிபுணர்கள்,வைத்திய அதிகாரிகள் 5000 பேர் மிகவிரைவில் வெளியேற தயாராகி இருக்கின்றார்கள் 20 ஆயிரம்வைத்தியர்கள் இருக்கின்ற நாட்டில் தற்போது 15 ஆயிரம் வைத்தியர்கள்தான் கடமையாற்றவுள்ளார்கள் இது இந்த நாட்டிற்கு ஆரோக்கியமானதல்ல வைத்தியசாலைகளை மூடும் துர்ப்பாக்கிய நிலமைகூட வரும் என்று நாங்கள் நினைக்கின்றோம்.

குறிப்பாக பேராதனை பல்கலைக்கழகத்தில் இருக்கும் 1500 விரிவுரையாளர்கள் உத்தியோகத்தர்கள் என்று கடமை புரியும்நிலையில் ஏறக்குறைய 800 பேர் வரையில் வெளிநாடுகளுக்கு செல்ல தயாராகி வருகின்றார்கள் படித்த கல்வி மான்கள் இன்று நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலமையினை வெளிநாடுகளுக்கு தப்பி செல்லும் நிலமையினை காணக்கூடியதாக இருக்கின்றது அரசாங்கத்தின் மோசமான வரிவிதிப்பு காரணமாக அவர்களின் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளது இங்கு சாதாரண மக்களாலேயே முடியவில்லை என்றால் அரச உத்தியோகத்தர்களால் எவ்வாறு எதிர்கொள்ளமுடியும் இந்த நிலையில் அவர்கள் வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள்.

இதனை ஆராய்ந்து தடுப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபடுவதாக தெரியவில்லை அரசாங்கம் இது சம்மந்தமாக ஒரு நிபுணத்துவம் கொண்ட குழுவினால் ஆராய்ந்து தீர்;வினை எடுக்கவில்லை என்றால் இவ்வாறே குறைந்து செல்லும்.
இன்று தமிழர் தரப்பும் பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு தப்பி சென்று கொண்டிருக்கின்ற நிலமை காணப்படுகின்றது.

படித்தவர்கள்,படிக்காதவர்கள்,வசதிபடைத்தவர்கள்,என்று எல்லோரும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று கொண்டிருக்கின்றார்கள் ஏதிலிகளாக இருக்கின்றவர்கள்தான் இங்கு மிஞ்சப்போகின்றார்கள். 

இவ்வாறு தொடர்ந்தால் சிறுபான்மை என்கின்ற பதம் மிக மோசமான ஒரு சிறுபான்மையாக மாறி நாங்கள் தொடர்ந்து எங்கள் மண்ணுக்காக போராடமுடியாத போராட மக்கள் இல்லாத நிலையில் சிங்களவர்களுடன் சேர்ந்துகொள்ளும் நிலமை வரும் விரக்த்தி வரும் அடிமைகளாக வாழவேண்டிய கட்டத்திற்கு வரும் போராட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்படுவார்கள் இவ்வாறு மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அரசாங்கத்தின் கரங்கள் மறைமுகமாக ஆதரவாக செயற்படுகின்ற நிலமை இருக்கின்றது. இங்குள்ள மக்கள் வெளிநாடுகளுக்கு போய் சேரட்டும் என்றுதான் பார்க்கின்றார்கள்

கடந்த கால தியாகங்கள் இழப்புக்கள் எல்லாம் குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு நாங்கள் அடிமை நிலமைக்கு நாங்கள் வாழ்கின்ற நிலமைதான் உருவாகும் வெளிநாடு செல்வதை நாங்கள் தடுக்கமுடியாத நிலைஇருக்கின்றது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *