Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Main News முல்லைத்தீவு

கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் தோண்ட தோண்ட மனித புதைகுழியாக!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்திபகுதியில் கடந்த 29.06.23 அன்று இனம் காணப்பட்ட மனித எச்சங்கள் தோண்டும் நடவடிக்கை 06.07.23 இன்று நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடைபெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் ரி.பிரதீபன் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கா கொக்குளாய் முதன்மை வீதி மறிக்கப்பட்டு அதிகளவு பொலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்க்ள்,பொலீசார்,சிறப்பு அதிரடிப்படையினர்,தடையவியல் பொலீசார்,கிராமசேவையாளர்,தொல்பொருள்திணைக்;களத்தின்,மின்சாரசபையின்,தொலைத்தொடர்பு பிரிவினர்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள், போன்றவர்களின் பங்குபற்றலுடன் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த அகழ்வு பணியினை முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி வாசுதேவ் அவர்களும் மருத்துவமனை சட்டவைத்தியஅதிகாரி மருத்துவர் ஆர்.றொஹான் ஆகியோர் அகழ்வு பணிகளை முன்னெடுத்துள்ளார்கள்.

கனரக இயந்திரம் கொண்டு குறித்த பகுதியினை தோண்டும் போது பல மனித எச்சங்கள் தடையப்பொருட்கள் தென்பட்டதை தொடர்ந்து தோண்டும் நிலப்பகுதியினை மேலும் விஸ்தரித்து தோண்டமுற்பட்ட போது நிலத்தில் பல மனித எச்சங்கள் இருப்பது இனம் காணப்பட்டுள்ளது சுமார் 20 அடி நீளம் வரை தோண்டப்பட்டுள்ளது

இதன்போது 13 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மாலை 3.00 மணியளவில் அகழ்வ பணிகள் இடைநிறுத்தப்பட்டு குறித்த பகுதியினை பாதுகாக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நீதிபதி பணித்துள்ளதுடன் இது தொடர்பிலான முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை சம்மந்த்தப்ட்ட தரப்பினர் நீதிபதியுடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவினர்கள் மற்றும் அரசாங்கத்தின் காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தரணிகள்,மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர்கள் சட்டத்தரணிகளுடன் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் குறித்த பகுதிக்கு பிரச்சன்னமாக அகழ்வு பணிகளை பார்வையிட்டுள்ளார்கள்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *