Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Uncategorized

முறிப்பு குளத்தின் அலகரைப்பகுதியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு!

முல்லைத்தீவு முள்ளியவளை கமநல சேவைத்திணைக்களத்தின் கீழ் உள்ள கணுக்கேணி குளம் முறிப்பு பகுதியில் அமைந்துள்ளது இதனை முறிப்பு குளம் என்று எல்லோராலும் பேசப்பட்டு வந்துள்ளது. இந்த குளத்தின் அலகரைப்பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் தொடர்ச்சியாக மணல் அகழ்வு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.இவ்வாறு மணல் அகழ்வதால் குளத்தின் அலகரை பகுதியில் பாரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன் போக்வுரத்து செய்யமுடியாத நிலையில்…

மாற்றுதிறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி!  

சமூக சேவைகள் திணைக்களமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான  உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டி இன்று (12) மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன்  அவர்களின் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக  நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை  சேர்ந்த வீரர்கள், சமூக…

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்து!

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது. இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்றைய தினமும்…

புதுக்குடியிருப்பில் சைக்கில் திருடனை கைதுசெய்த பொலீசார்!

புதுக்குடியிருப்பில் துவிச்சக்கரவண்டி திருட்டுடன் தொடர்புடைய இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் சிவராத்திரி தினத்தன்று கந்தசாமி கோயிலுக்கு வந்த பக்தருடைய துவிச்சக்கரவண்டி பகல் 12 மணியளவில்  திருடப்பட்டுள்ளது. இதனையடுத்து துவிச்சக்கரவண்டி உரிமையாளரால் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய…

முள்ளியவளை பொலீசாரின் வாகனம் தடம் புரண்டது!

முள்ளியவளை பொலீசாரின் வாகனம் தடம் புரண்டது! முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் நிலையத்துக்குரிய பொலீஸ் வாகனம் ஒன்று ஒட்டி சுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டு உள்ளது11-03-24 இன்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற பொலீஸ் வாகனம் மீண்டும் மாங்குளத்தில் இருந்து ஒட்டு சுட்டான் நோக்கி…

மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வு!

உதயசூரியன் விளையாட்டு கழகத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் மண்ணின் மைந்தர்கள் வெற்றிக்கிண்ணத்தின் ஆரம்ப நிகழ்வானது இன்று உதயசூரியன் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தில் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி நேற்று (09.03.2024) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. விருந்தினர்கள் வரவேற்று அழைத்துவப்பட்டதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் அறிமுகம் இடப்பெற்றதுடன், குழுப்படம்…

முல்லைத்தீவில் இருந்து ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கோரிக்கை!

எமது நிலத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்! முல்லைத்தீவில்  தபால் அட்டை  மூலம் ஜனாதிபதிக்கு கோரிக்கை அனுப்பி வைப்பு நிலத்தை இழந்த மக்களின் குரல் அமைப்பின் ஊடாக எமது நிலத்தை எம்மிடம் மீள ஒப்படையுங்கள் எனும் தொணிப்பொருளில் வடமாகாண ரீதியாக முப்படைகள் வசம்  இருக்கும் மக்களின் காணிகளை விடுவிக்க கோரி தபால் அட்டை மூலம் ஜனாதிபதியை கோரும் நடவடிக்கை…

வெடுக்குநாறி ஆலயம் தொடர்பாக இந்துக்கள் ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள்!

வெடுக்குநாறி ஆலய விவகாரம் தொடர்பாக ஜனாதிபதித் தேர்தலில் இந்துக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஒரு பாடத்தை படிப்பிப்பார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ பி ஆர் எல் எப் கட்சியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். நேற்று (09.03) வவுனியாவில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு…

மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டு மீட்பு!

09.03.2024 அன்று மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீதிகளுக்கு அருகாமையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிதைந்த கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பில் மாஞ்சோலை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி முள்ளியவளை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்தார்.  அதன்படி, முள்ளியவளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மீட்கபடவுள்ளது

உடையார்கட்டு பகுதியில் கஞ்சாபாவித்த இருவர் கைது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உடையார் கட்டு பிரதேசத்தில் வைத்து கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். 09.03.2024 உடையார் கட்டுப்பகுதியில் பாதுகாப்பு தரப்பினை சேர்ந்த ஒருவர் மற்றும் பொதுமகன் ஒருவரும் கஞ்சாவுடன் இருவரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்துள்ளார்கள். இவர்கள் இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இவர்கள் கஞ்சா மற்றும் ஜஸ் பாவித்துள்ளமை தெரியவந்துள்ளது.இவர்களிடம் இருந்து 880 மில்லிக்கிராம்…