Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

யாழ்ப்பாணம்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று (04)உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை!

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு இன்றையதினம் நல்லை ஆதீனத்தில் நடைபெற்றது. இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து சம்பிரதாயபூர்வமாக கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன், சமூக…

புதுக்குடியிருப்பில் கனடா மாப்பிளையின் திருமணத்தில் சர்ச்சை!

கனடாவில் வதிவிட உரிமை பெற்ற 24 அகவையுடைய இளைஞனின் திருமணத்தில் சர்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தினை சேர்ந்த குறித்த இளைஞன் பதிவு இல்லாத நிலையில் இரண்டு பெண்களுடன் குடும்பமாக வாழ்ந்து விட்டு ஒரு பெண்ணுக்கு பிள்ளை ஒன்றும் உள்ள நிலையில் தற்போது புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியினை சேர்ந்த யுவதியினை திருமணம் முடித்ததில் சர்சையான நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது….

யாழ்ப்பாணம் வாள்வெட்டு குழு புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து ஹயஸ் வாகனத்துடன் கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பணை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த 04.12.2023 அன்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய நபர் மற்றும் ஹயஸ் வாகனம் என்பன புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் வைத்து பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளர்கள். தெல்லிப்பணை பொலீஸ் நிலையத்திற்கு அருகில் கடந்த திங்கட்கிழமை(04) ஹயஸ் வாகனத்தில் வந்த இனம் தெரியாத குழு மோட்டார் சைக்கிலில் வந்த இளைஞர்கள்…

மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு உதவி வழங்கி வைப்பு!

பெண் தலைமை தாங்கும் குடும்பமான மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்திற்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தினை சேர்ந்த மறைந்த ஊடகவியலாளர் நிபோஜனின் குடும்பத்தினருக்கு கனடா செந்தில் குமரனின் நிவாரண அமைப்பின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும்  நோக்கில் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் பொருட்கள் திருகோணமலையில் அவரது மனைவி இல்லத்தில்…

நல்லூர் புகழ் பிரசன்ன ஐயரின் குரலில் -டக் டிக் டோஸ் திரைப்பட பாடல்!

ஈழத்து இளைஞர்களால் தயாரிக்கப்பட்டு பெருமளவில் வெற்றி பெற்ற புத்தி கெட்ட மனிதரெல்லாம் திரைப்படத்தினை தொடர்ந்து ராஜ் சிவராஜ் இயக்கத்தில்  டக் டிக் டோஸ் எனும் திரைப்படத்த்தினை அக்குழுவினர் தயாரிக்கின்றனர். வெகு விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றை  நல்லூரில் “கட்டியம்” சொல்லி பிரசித்தி பெற்ற பிரசன்னக்குருக்கள் பாடியுள்ளார். இதற்கான இசையினை பூவன் மதீசன்…

வெளிநாட்டு மோகம் பணத்தினை கொடுத்து ஏமாறாதீர்கள்-பொலீசாரின் அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக பேஸ்புக், வாட்ஸ்அப் இல் வரும் தகவல்கள் தொடர்பில்,அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரிக்கை..! வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு…

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே விழிப்பாக இருங்கள்!

சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் கைவரிசை! சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர் அந்த வைகையில் கடந்த 02ம திகதி இரவு பலாலியிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த NGC  சொகுசு பேரூந்தில் ஒரு குடும்பம் முற்பதிவு மேற்கொண்டு கொழும்புக்கு பயணத்தை மேற்கொண்டிருந்தது பேரூந்து புத்தளம் பகுதியை…

வயோதிப பாட்டியின் கொலை முன்னால் மாகாணசபை உறுப்பினரின் மகள் கைது!

மூதாட்டி ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் நெல்லியடி பொலிஸாரினால்,   வியாழக்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – அல்வாய் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வீடொன்றில் இருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அல்வாய் கிழக்கை சேர்ந்த பழனிப்பிள்ளை தில்லைராணி (வயது 84) எனும் மூதாட்டியே…

வடக்கினை சேர்ந்த 67 பாடசாலைகளுக்கு தலா 1.5 இலட்சம் நிதி உதவி அவுஸ்ரேலியாவால் வழங்கிவைப்பு!

நாடு முழுவதும் பாடசாலைகளில் பாடசாலை தோட்டத்தினை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் தொடங்கப்பட்டு அவ்வாறு பாடசாலைகளில் விவசாய செய்கைக்கான தோட்டத்திற்கான உள்ளீடுகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாணத்தில் பாடசாலை தோட்டங்களை மேற்கொண்ட தெரிவுசெய்யப்பட்ட 67 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபா பவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்தங்கிய பாடசாலைகளுக்கு இந்த நிதி உதவியினை அவுஸ்ரேலியா மக்களின்…