Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

தென்னியன்குளம் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பகுதியில் வாகன விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 04.07.24 அன்று மேசன் வேலைக்காக வாகனத்தில் வேலைக்காக உயிலங்குளம் வீதி ஊடக தென்னியங்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வாகனம் உயிலங்குளம் பகுதி வயல் வெளியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை வாகனத்தின் சில் ஒன்று காற்று போனதால் வாகனம் பிரண்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளது இதன்போது…

விசுவமடுவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து!

விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் தும்பு உற்பத்தி தொழிற்சாலை இன்று தீ விபத்திற்கு இலக்காக உள்ளது.  முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பிரதேசத்துக்குட்பட்ட விசுவமடு வள்ளுவர் புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்று இன்று தீ விபத்துக்கு உள்ளாகியுள்ளது தொடர்ந்து குறித்த பகுதிக்கு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு…

வடமாகாண விளையாட்டு போட்டியில் முதல் இடம்பிடித்த யாழ்மாவட்டம்!

2024 ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டு விழாவின் அனைத்து விளையாட்டின் அடிப்படையில் தொடர்ந்தும் 4 ஆவது தடைவையாக முல்லைத்தீவு மாவட்டம் இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டது. கடந்த 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் மாகாண விளையாட்டு திணைக்களத்தால் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வட மாகாண விளையாட்டு விழாவில், நடைபெற்று முடிந்த மெய்வல்லுனர் போட்டிகளின்…

துணுக்காய் கோட்ட பாடசாலை மாட்ட போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலிடம்!

துணுக்காய் கோட்ட பாடசாலை மாட்ட போட்டியில் யோகபுரம் மகாவித்தியாலம் முதலிடம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசதலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட தடகள விளையாட்டு போட்டி கடந்த 03.07.2024 தொடக்கம் 04.07.2024 வரை மல்லாவி மத்திய கல்லூரியில் நடைபெற்றுள்ளது இதன்போது யோகபுரம் மகாவித்தியாலயம் அதிகூடிய புள்ளிகளை பெற்று கோட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது. யோகபுரம் ஆரம்ப…

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு மூன்றாம் கட்டம்!

கொக்குத்தொடுவாய் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வு மூன்றாம் கட்டம் அகழ்வாய்வு மூன்றாம் கட்டம் இரண்டாம் நாள்  கொக்களாய் பிரதான வீதியை அகழ்ந்து ஆய்வுசெய்யும் செயற்பாடுகள் ஆரம்பம் 05-07-24 முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வாய்வின், இரண்டாம் நாள் அகழ்வாய்வுச் செயற்பாடுகள் இன்று (05) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.  இந்நிலையில் கொக்கிளாய் – முல்லைத்தீவு பிரதான வீதியின் முதற்படை அகழப்பட்டு…

முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பில்தொடக்கிவைக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை 7 பேர்கைது!

யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் புதிய பரிணாமத்துடன் நேற்று (04) முதல் மீண்டும் முன்னெடுக்கப்படுகின்றது நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பொலீசாரும் இராணுவத்தினரும் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றார்கள்.முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இந்த நடவடிக்கை 04.07.2024 அன்று தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக…

முல்லைத்தீவில் அமரர் சம்மந்தனுக்கு அஞ்சலி நிகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி நகர் பகுதியில் மறைந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தனுக்கு (04.07.2024) அஞ்சலி செலுத்தப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் துணுக்காய்,மாந்தை கிழக்கு பகுதி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் பொதுச்சடர் ஏற்றப்பட்டு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முன்னாள் நாடாளுமன்ற…

ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது கடற்படை புலனாய்வாளரால்  தொடரப்பட்ட வழக்கு – விசாரணைகள் ஆரம்பம் !

முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளருமான சண்முகம் தவசீலன் மீதான வழக்கு இன்று (04) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது    வழக்கு தொடுனரான குறித்த கடற்படை புலனாய்வாளர் வருகை தந்து நீதிமன்றில் சாட்சியாளித்தார் தொடர்ந்து ஊடகவியலாளர்  சண்முகம் தவசீலன் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி வீ  எஸ் எஸ் தனஞ்சயன் குறுக்கு விசாரணைகளை மேற்கொண்டார்…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின்  3 ஆம் கட்ட அகழ்வுப் ஆரம்பம்!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள்  மூன்றாம் கட்டமாக இன்று (04.07.2024) ஆரம்பிக்கப்பட்டுள்ளது . முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி  அகழ்வுப்பணியானது 2023 ஆம் ஆண்டு ஆணி  மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்பட்டு 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் நிதிப்பற்றாக்குறை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில் கொக்குத்…

கொக்குத்தொடுவாய் புதைகுழி 40 உடலங்கள் மீட்பு- 3ஆம் கட்டம் அகழ்வு!

கொக்குத்தொடுவாய் விடுதலை போராளிகளின் புதைகுழி 40 உடலங்கள் மீட்பு 3ஆம் கட்டம் அகழ்வு!முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வின் 3 ஆம் கட்ட அகழ்வு பணிகள் நாளை 04.07.2024 ஆம் திகதி தொடக்கம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி இனம் காணப்பட்ட 2023 ஆம் ஆண்டு யூன் மாதம் தொடக்கம் நீதிமன்ற உத்தரவிற்கு…