Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

முல்லைத்தீவு

வட்டு இந்து வாலிபர் சங்கத்தினால் 18 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

யாழ்ப்பாணம் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் கனடாவில் உள்ள புலம்பெயர் ஒருவரின் பிறந்த நாளில் அவரின் நிதி உதவியுடன் முல்லைத்தீவு துணுக்காய் பாண்டியன் குளம் பிரதேசத்தில் துணக்காய் தொழில்நுட்ப கலை கலாச்சார மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தின் ஒழுங்கமைப்பில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் 19.11.23 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. கடந்த…

ஆற்றினை கடந்தே பிணத்தினை கொண்டு செல்லும் நிலையில் கிராம மக்கள்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் சின்னச்சாளம்பன் கிராமத்தில் மக்கள் உயிரிழந்தவர்களின் உடலங்களை கொண்டுசெல்வதற்கு ஆற்றினை கடந்து கொண்டுசெல்லவேண்டிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். பிரதேச சபையினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களில் முக்கியமானது பிரதேச சபையின் ஆழுகையின் கீழ் உள்ள பகுதிகளில் சுடுகாடுகள் அமைத்துக்கொடுத்தல் மற்றும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தலாகும்.இந்த நிலையில் சின்னச்சாளம்…

முருகனின் படைத்தளபதிகளுடன் நடைபெற்ற சூரன்போர்!

தமிழ் கடவுளான முருகப்பெருமானை வேண்டி அனுஸ்டிக்கப்படும் விரதங்களில் மிகவும் முக்கியமான விரதம் கந்த சஷ்டி விரதமாகும் இந்த விரதம் ஆறு நாட்களாக அனுஸ்டிக்கப்பட்டு இறுதி நிகழ்வான சூரசம்கார நிகழ்வு 18.11.2023 அன்று முருகன் ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. முல்லைத்தீவு முள்ளியவளையில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண வேலவர் ஆலய்தில் கந்தசஷ்டி விரதத்தின் சூரசம்கார நிழக்வு 18.11.23 அன்று…

தண்ணீரூற்றில் முதன்மை வணிக நிலையம் ஒன்றில் பாரிய கொள்ளை!

முல்லைத்தீவு தண்ணீரூற்று நகர்பகுதியில் அமைந்துள்ள பாரியளவிலான வணிக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று கடந்த 15.11.2023 அன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கடந்த 15.11.2023 அன்று வணிக நிலையத்தின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு கொள்ளையர்கள் கதவின் பூட்டினை உடைத்து கடைக்குள் நுளைந்துள்ளார்கள். கடைக்குள் நுளைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 19 பண்டல் சிகரட் பெட்டிகளை…

வெள்ளத்தில் மூழ்கிய புதுக்குடியிருப்பு நகரம்!

வெள்ளத்தில் மூழ்கிய புதுக்குடியிருப்பு நகரம்-8 குடும்பங்கள் பாதிப்பு பல வணிக நிலையங்கள் வீடுகளுக்குள் மழை வெள்ளம் ! புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மழை வெள்ளத்தினால் 8 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக  புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் நேற்றிரவு( 16)பெய்த கடும் மழையினால் புதுக் குடியிருப்பு நகர்ப்பகுதி உள்ளிட்ட மக்களின் குடியிருப்பு பகுதிகள் வணிக நிலையங்கள்…

தானாக உடைப்பெடுத்த நந்திக்கடல் நீர் ஏரி!

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்துவரும் மழையினால் நந்திக்கடலுக்கான நீர்வரத்து அதிகமாக காணப்பட்டுள்ளதை தொடர்ந்து வெட்டுவாகல் ஊடகான நந்திக்கடல் முகத்துவாரம் தானக உடைப்பெடுத்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட முறிப்பு குளம் வான்பாய்கின்ற நிலையில் முத்தையன் கட்டு குளத்தின் கீழான பேராற்று நீரும் நந்திக்கடலை சென்றடைந்துகொண்டிருக்கின்றது. அதிகளவான மழைவீழ்ச்சியால் நந்திக்கடலுக்கான மழைவெள்ள நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டுள்ளதை தொடர்ந்து…

கட்சியின் மறைந்த மாவட்ட அமைப்பாளருக்கு தேசப்பற்றாளர் கௌரவம் வழங்கி மதிப்பளிப்பு!

தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளராக இருந்து உடல் நல குறைவால் 14.11.2023 அன்று மறைந்த கணபதிப்பிள்ளை விஜயகுமார் அவர்களுக்கு தமிழ்தேசிய மக்கள் முன்ணியினரால் தேசப்பற்றாளர் என்ற கட்சியின் உயரிய விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளார். தமிழ்தேசிய மக்கள் முன்னணி கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளராகவும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முன்னால் உறுப்பினராக இருந்து உயிரிழந்த…

பாண்டியன்குளத்தில்  ஒரின பாலியல் துஸ்பிரயோகம் தனியார் வாத்தி கைது!

முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் தனியார் வகுப்பு நடத்தி வரும் வாத்தி ஒருவர் ஆண்மாணவர்களுடன் நீண்டகாலமாக ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் பாண்டியன்குளம் பிரதேசத்தில் கணிதபாடத்தில் சிறப்புதேர்ச்சி பெற்ற வாத்தி ஒருவர் மாணவர்கள் மத்தியில் கணிதபாடம் கற்பிப்பதில் சிறப்பான…

முல்லைத்தீவில்-முறிப்பு குளம் வான்பாய்கின்றது!

முல்லைத்தீவில் தொடர்சியாக பெய்துவரும் மழை காரணமாக கணுக்கேணிக்குளம்(முறிப்பு)வான்பாய்கின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்திலும் ஒட்டுசுட்டான் பிரதேசத்திலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகிவருகின்றது.இந்த நிலையில் முள்ளியவளை கமநல சேவை நிலையத்திற்கு உட்பட்ட கணுக்கேணி குளம் எனப்படும் முறிப்பு குளம் வான்பாயதொடங்கியுள்ளது. தொடர்ந்து மழை நீடிக்குமாயின் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பாக்கப்படுகின்றது. பாதிப்பு ஏற்படக்கூடிய மக்கள் வாழும் பகுதிகளில் முன்எச்சரிக்கையுடன்…

 உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி! 

முல்லைத்தீவு மாவட்ட கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லயன் வைத்தியர் கிரிஜகலா அவர்களின் நெறிப்படுத்தலில் முல்லைமாவட்டகால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்குட்பட்ட  20  உத்தியோகத்தர்களுக்கான கணினித் திறன் விருத்திப்பயிற்சி நெறி (முழுநேரம்) கடந்த இரு நாட்களாக மல்லாவி தொழில்நுட்ப கலை கலாசாரம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமையத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் பயிற்சி…