Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Admin

முள்ளியவயளை மாட்டு கள்ளன் பொலீசாரால் கைது!

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்தில் மக்களின் வாழ்வாதாரமாக காணப்படும் பசுமாடுகளை திருடி இறச்சிக்காக விற்பனை செய்து வருகின்றமை அதிகரித்துள்ளது. இதில் ஒருசில இளைஞர் கும்பல் ஒன்றே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளமை மக்கள் அறிந்துள்ளது முள்ளியவளை செங்குந்தாவீதி,மற்றும் பூதன்வயல், வற்றாப்பளை போன்ற பகுதிகளில் மக்களின் கால்நடைகள் அதிகளவு களவு போயுள்ளது. இது தொடர்பில் கடந்த காலங்களில்…

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும்!

கொக்குத்தொடுவாய் மண்ணின் விடயத்தை சர்வதேச சமூகம் கையிலே எடுக்கும். சரியான விடையை தருவதற்கு சர்வதேச விசாரணையே வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்  கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி இன்று (11) இடம்பெறும் இடத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். முன்பு அகழப்பட்ட முறைக்கும் தற்போது அகழப்படுகின்ற முறைக்கும்…

மனித புதைகுழி -மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே?

உள்நாட்டு பொறிமுறைகளில் நம்பிக்கை இல்லாத மக்களுக்கு கொக்குதொடுவாய்  மனித புதைகுழி அகழ்வு பணி தமிழ் மக்களுக்கு ஆறுதலை வழங்கும் என்பது கேள்விக்குறியே என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இன்று (11) நடைபெறும் இடத்தை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே…

கொக்குத்தொடுவாய் – உடலங்கள் அடுக்கடுக்காக குவிந்து கிடக்கின்றது!

ஐந்தாம் நாள் அகழ்வு பணிகள் நிறைவு. இதுவரை ஐந்து உடற்பாகங்கள் மீட்பு. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இன்று (11) ஐந்தாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஐந்தாம் நாள் அகழ்வுப் பணிகள் சற்று முன்னர் நிறைவடைந்தது. அகழ்வு பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி…

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள்  ஐந்தாவது நாளாக இன்று (11) இடம்பெறும் நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் மற்றும் சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் அகழ்வுப் பணிகளை பார்வையிட்டனர் முல்லைத்தீவு –…

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு மீட்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி த.வி.பு.இ-1333 இலக்கத்தகடு மீட்பு! முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் நான்காம் நாள் அகழ்வாய்வுகள் இன்று 09.09.23  தர்மலிங்கம் -பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய…

பொலிசார் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியது, கண்டனத்திற்குரியது!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், மனிதப் புதைகுழி அகழ்வில் மூன்றாம் நாள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றபோது அங்கு செய்திசேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களான விஜயரத்தினம் சரவணன் மற்றும், பாலநாதன் சதீஸ் ஆகியோர் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டிருந்தனர். இந் நிலையில் பொலிசாரின் குறித்த அச்சுறுத்தல் செயற்பாடு கண்டனத்திற்குரியதென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி மூன்றாம் நாள் அகழ்வாய்வின்…

பெண் போராளிகளின் இருமனித எச்சங்கள் முற்றாக அகழ்ந்தெடுப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) வியாழனன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.  இந் நிலையில் மூன்றாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (08) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. இந்த மூன்றாம் நாள் அகழ்வாய்வின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின்…

புத்தர்சிலை வைத்து வழிபட்ட விவகாரம் வழக்கு நவம்பர் 23இற்கு ஒத்திவைப்பு!

குருந்தூர் மலையில் கல்கமுவ சந்தபோதிதேரர் மற்றும், மறவன்புலவு சச்சிதானந்தன் உள்ளிட்ட குழுவினர் புத்தர்சிலை வைத்து வழிபாடுகளை மேற்கொண்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன் ஆகியோரின் முறைப்பாட்டிற்கமைய, பொலிசாரால் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது. இந்த வழக்குத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள பொலிசார், நீதிமன்றிடம்…

மாங்குளத்தில் வெடிபொருள் வெடித்து சிறுமி உள்ளிட்ட இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் இன்ற இனம்காணப்படாத வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுடன் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்திய சாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்  மாங்குளம் நீதிபுரம் பகுதியை சேர்ந்த இருவரும் விறகு எடுப்பதற்காக  சென்ற போதே குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த சம்பவத்தில்  மாரிமுத்து மணியம்…