Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Year: 2024

முல்லை சிங்கள பூமியாக மாறுகிறது!

தமிழ் அரசியல்வாதிகள் எமது மண்ணை காப்பாற்றவாவது பாராளுமன்றத்தில் வாய் திறந்து பேச வேண்டும் என முல்லைத்தீவு தீவு மாதர் சங்க தலைவி சு. கங்கம்மா வேண்டுகோள் விடுத்தார். 08.05.2024 வட மாகாண ஆளுநர் செயலாளருக்கு முன்னால் இடம் பெற்ற போராட்டத்தின்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்டம்…

புதுக்குடியிருப்பில்  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு!

புதுக்குடியிருப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான  நூற்றுக்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்ப்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் இன்றையதினம்(08) கைப்பற்றப்பட்ட சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு  பகுதியில் சட்டவிரோத…

 சாதனைப்பெண் அகிலத்திருநாயகிக்கு ”முல்லையின் வீரமங்கை” பட்டம் !

08.05.2024 அன்று முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையினை சேர்ந்த விளையாட்டில் சாதனை படைத்த ஸ்ரீசெயானந்தபவன் அகிலத்திருநாயகி அவர்களுக்கு முள்ளியவளை கிழக்கு மக்கள் முல்லையின் வீரமங்கை பட்டம்  வழங்கி கௌரவித்துள்ளார்கள். இந்த கௌரவ நிகழ்வு முள்ளியவளை கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் சிறப்புற நடைபெற்றுள்ளது. முன்னதாக அகிலத்திருநாயகி உள்ளிட்ட விருந்தினர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்துவரப்பட்டு முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் ச.கனகரத்தினம்…

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 25 புதிய கிராமஅலுவலகர் நியமனம்(விபரம் உள்ளே)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நட்டில் 2100 கிராம அலுவலகர்களுக்கான புதிய நியமன கடிதங்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பரீட்சை முடிவுகளின் படி பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்ற 2100 விண்ணப்பதாரிகளுக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள்…

கரவெட்டி-யார்க்கரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல்!

ஆலயங்களில் நடைபெறும் மேசடிகளை கண்டுகொள்ளாத திணைக்களங்கள்வடமாகாணத்தில் உள்ள ஆலயங்களில் இடம்பெறும் நிதி மோசடிகள் மற்றும் நிர்வாக மாற்றங்கள் தொடர்பில் வடமாகாணத்தின் உள்ள திணைக்களங்கள் சரியான நடவடிக்கை எடுக்கத்தவறுவதாக மக்கள் கருத்து வெளியிட்டுவருகின்றார்கள்.யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் அமைந்து இருக்கும் யார்க்கரு வரசித்திவிநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பானது ஆலயத்தின் தலைவரான (ஓய்வு பெற்ற கிராம அலுவரும் முழுத்தீவுக்குமான சமாதான…

கண்ணகி அம்மன் பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உட்சவம் சிறப்பாக நடைபெற்றுள்ளது!

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப உட்சவமான பாக்குத்தெண்டல் உற்சவம் இன்று 06.05.2024 அதிகாலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் முள்ளியவளை காட்டாவிநாயகர் ஆலயத்தில் மடைபரவி வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதை தொடர்ந்து ஆலயத்துடன் பாரம்பரியமாக தொடர்புடைய குடும்பங்களிடம் சென்று பாக்குத்தெண்டல் நடைபெற்றுள்ளது. பாரம்பரிய வரலாற்று தொன்மைமிக்க தெய்வமான…

முல்லைத்தீவு வெலிஓயா விவசாயிகளின் பிரச்சினைக்கு தீர்வு கொடுத்த அமைச்சர்!

ஹலம்பவெவ  விவசாயியின் நான்கு நாள்  உண்ணாவிரதம் அமைச்சர் மனுஷவின் தலையீட்டினால்  முடிவுக்கு கொண்டுவரப்பட்டது . முல்லைத்தீவு வெலிஓயா ஹலெம்பவெவ விவசாயிகள் அமைப்பின் தலைவர் தண்ணீர் பிரச்சினை காரணமாக  முன்னெடுத்து வந்த நான்கு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின்  தலையீட்டினால்  முடிவுக்கு  கொண்டுவர  அவ் அமைப்பு  கடந்த  (04…

முள்ளியவளை புதறிகுடா நீர்தேக்கத்தில் இருந்து உடலம் மீட்பு!

முல்லைத்தீவு முள்ளிவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட புதறிகுடா பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் இருந்து உடலம் ஒன்று இன்று 04.05.2024 மீட்கப்பட்டுள்ளது. முள்ளியவளை புதறிகுடா நீர்தேக்கத்தில் இருந்து உயிரிழந்த நிலையில் வயோதிபர் ஒருவரின் உடலம் காணப்படுவதாக முள்ளியவளை பொலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்று இரவு குறித்த பகுதிக்கு சென்ற பொலீசார் உடலத்தினை மீட்டுள்ளார்கள். தண்ணீரூற்று கிழக்கு…

முல்லைத்தீவில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரின் தலைமையில் பல திட்டங்கள் முன்னெடுப்பு!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு பல பிரதிபலன்களை வழங்கும் வகையில், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவை தேசிய வேலை திட்டம் வேலைத்திட்டம், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று 03.05.24 காலை புதுக்குடியிருப்பில் ஆரம்பமானது. அத்துடன் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகள்,…

அளம்பில் காணி சுவீகரிக்க முயற்சி  தடுத்து நிறுத்தம்!

முல்லைத்தீவு மாவடடத்தின் அளம்பில் மாவீரர் துயிலும் இல்ல காணியினை, இலங்கை இராணுவத்தின்  சிங்க ரெஜிமென்ட் பத்தாவது பட்டாலியன் தலையகத்துக்கு   சுவீகரித்து வழங்க எடுத்த நான்காவது தடவையாகவும் எடுக்கப்பட்ட முயற்சி அப் பகுதி மக்களாலும், அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலராலும் இன்று (02.05.2024) தடுத்து நிறுத்தப்பட்டது. குறிப்பாக நில அளவை திணைக்களத்தினர் ,கரைதுறைப்பற்று பிரதேச செயலக…