Voice Of Mullai

TamilNews|Mullaitivu|jaffna|vanni|Kellinochchi|Vavuniya

Month: September 2023

பிள்ளையான் குழுவும் திரிபோலி குறுப்பினை சேர்ந்தவர்கள்-க.சிவநேசன்

தமிழ்தேசிய தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இயக்கங்களின் ஒருங்கிணைப்பினை இல்லாமல் செய்வதற்கான ஒரு குழு மிக நீண்டகாலமாக பராமரித்து வருகின்றார்கள்  அதுதான் திரிபோலி குறுப் அந்த குழுவினை சேர்ந்தவர்கள்தான் பிள்ளையான் குழுவினரும் என முன்னால் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். 30.09.23 அன்று முல்லைத்தீவு ஊடக அமையத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர்…

குருந்தூர்மலை அடியில் ஒரு ஏக்கரில்இந்து ஆலயத்திற்கும் ஒரு ஏக்கரில் பௌத்த ஆலயத்திற்கும் ஒதுக்கீடு?

வடக்கு கிழக்கு என்பது தமிழர்களின் பூர்வீக தாயகம். தமிழர்களின் சொத்தாக குருந்தூர் மலையை நாங்கள் பார்க்கின்றோம். குருந்தூர் மலையில் வெளிப்பட்ட லிங்கமும் அதனை உறுதிப்படுத்துகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். இன்றையதினம் (30.09.2023) முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.  தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், குருந்தூர்மலை…

முல்லைத்தீவு நீதிபதிக்கு உயிர் அச்சுறுத்தல் பதவியினை துறந்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறினார்!

உயிர் அச்சுறுத்தல், தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல்மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்தமுல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை வருமாறு,குருந்தூர்மலை…

முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்!

முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்குஉட்பட்ட நெடுங்கேணி தண்ணீரூற்று வீதியில் எரிபொருள் ஏற்றிவந்த பௌசர் ஒன்ற வீதியினை விட்டு விலகி விபத்திற்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் மதவாளசிங்கன் குளத்திற்கு செல்லும் பகுதிக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது கொழும்பில் இருந்து எரிபொருள் ஏற்றிவந்த பௌசர் ஒன்று சாரதியின் கவன குறைவினால் வீதியினை…

யானை உயிரிழந்தமை காணி உரிமையாளர் கைது 14 நாட்கள் விளக்கமறியலில்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட கனகரத்தினபுரம் பகுதியில் விவசாயிஒருவரால் பாதுகாப்புக்காகபொருத்தப்பட்ட மின்சார வேலியில் சிக்கிய காட்டுயானை ஒன்று கடந்த 23.09.23 அன்று உயிரிழந்துள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் மருத்துவர்குழுவினர் 24.09.23 அன்று சென்று பார்வையிட்டு மின்சாரம் தாக்கியே யானை உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்தை தொடர்ந்து யானையின் உடலம் அன்றே புதைக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஒட்டுசுட்டான் வனஜீவராசிகள்…

முள்ளிவாய்க்கால் கடற்கரையில் 13அடி ஆழத்தில் தங்கம்,ஆயுதங்கள் தேடுதல் வேட்டை முடிவு!

முல்லைத்தீவு போலீஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகள் காலத்தில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்திருப்பதாக நம்பப்படும் கடற்கரை பகுதி ஒன்றில் போலீஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த நம்ப தகுந்த ரகசிய தகவலை அடுத்து குறித்த பகுதியில் அகழ்வு பணிகள் கடந்த 25 ஆம் தேதி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில்…

முள்ளியவளையில் திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி!

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் தமிழர் தாயக பகுதிகள் மற்றும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், முள்ளியவளை பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில்உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காய் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரின் வீதியில் 12 நாட்கள்…

ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி 2வது நாளாக முன்னெடுப்பு!

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் நேற்று (25) காலை அகழ்வு பணியானது ஆரம்பமாகியிருந்தது. முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று நேற்றைய தினம் பிற்பகல் அகழ்வுப்பணிகள் பொலிஸாரால்…

 60 பயனாளிகளுக்கு தலா 3500 உதவித்தொகை வழங்கி வைப்பு!

பெரண்டீனா  நிறுவனத்தினால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 60 வீட்டுத்தோட்ட பயனாளிகளுக்கு தலா 3500  உதவித்தொகை வழங்கி வைக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம்(26)  இடம்பெற்றது  நாடளாவிய ரீதியில் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் பெரண்டீனா நிறுவனமானது  பல வருடங்களாக பல்வேறுபட்ட உதவித்திட்டங்களை மக்களுக்கு வழங்கிவருகின்ற நிலையில் இவ்வாண்டு 13…

புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய மாம்பழத் திருவிழா

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய மாம்பழத் திருவிழா நேற்று (25) மிகவும் சிறப்பாக இடம்பெற்றது  புதுக்குடியிருப்பு ஸ்ரீ உலகளந்த பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 20.09.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது அந்தவகையில் ஆறாம் திருவிழாவான மாம்பழத்திருவிழா நேற்று (25) ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது ஆலய…