வள்ளுவர்புரத்தில் பெற்றோல் திருடும் போது தீ பற்றிக்கொண்டதில் மாட்டிக்கொண்ட திருடன்!

0 421

விசுவமடு வள்ளுவர் புரம் கிராமத்தில் கடந்த காலங்களில் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து மோட்டார்,தேங்காய்,பெற்றோல்,சங்கிலி பறிப்பு உள்ளி;ட்ட பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சிறுவன் ஒருவர் பெற்றோல் திருடும் போது மோட்டார்சைக்கில் தீ பற்றிக்கொண்டதில் வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

15 அகவையுடைய குறித்த சிறுவன் வள்ளுவர் புரம் கிராமத்தில் வீடுகளில் புகுந்து தண்ணீர் இறைக்கும் மோட்டர்கள்,தென்னை மரங்களில் ஏறி தேங்காய்கள்,வழிப்பறி உள்ளிட்ட கொள்ளைகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையில் அண்மை நாட்களாக வீடுகளில் நிக்கும் மோட்டார் சைக்கில்களில் பெற்றோல் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துகாணப்பட்டுள்ள நிலையில் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில்

இனறு10.08.2022 அதிகாலை வேளை வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிலில் ஆண்கள் ஓடும் மோட்டார் சைக்கில் ஒன்றில் இருந்த 4 லீற்றர் பெற்றோலினை திருடிவிட்டு பெண்கள் ஓடும் மோட்டார் சைக்கிலில் பெற்றோலினை திருட முற்பட்ட போது இருட்டு காரணமாக வெளிச்சத்திற்காக தீ பெட்டியில் தீக்குச்சினை பற்றவைத்துள்ளார்.

இதன்போது தீ மோட்டார் சைக்கிலில் இருந்த பெற்றோல் வரும் பைப்பில் பற்றி மோட்டார் சைக்கில் தீபற்றிக்கொண்டுள்ளது.

வீட்டவர்கள் தீடீரென விழித்து பார்த்தபோது திருடன் பாய்வதை கண்டும் மோட்டார் சைக்கில் பற்றி எரிவதை கண்டு அயலவர்களை அழைத்து தீ பற்றிக்கொண்ட மோட்டார் சைக்கிலின் தீயினை அணைத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதுடன் திருடன் அருகில் உள்ள பற்றைக்காட்டில் மறைந்திருந்த வேளை இளைஞர்கள் ஆண்கள் ஒன்று திரண்டு திருடனை பிடித்து கட்டிவைத்துக்கொண்டு பொலீசாருக்கு தகவல் வழங்கியுள்ளதை தொடர்ந்து புதுக்குடியிருப்பு பொலீசார் திருடனை கைதுசெய்து கொண்டுள்ளதுடன் எரிந்து சேதமான மோட்டார் சைக்கிலையும் கொண்டு சென்றுள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப் பட்ட திருடனிடம் விசாரணைகளை மேற்கொண்டு சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலீசார் ஈடுபட்டுள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.