முறைப்பாட்டை ஏற்காத நட்டாங்கண்டல் பொலிசார்!

0 21

முல்லைதீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பகுதிகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள் தொடர்பில் பிரதேச மக்களால் நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்றபோது முறைப்பாடு ஏற்கப்படாமல் மக்கள் திருப்பி அனுப்பப்படுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளனர்

அண்மைக்காலமாக மாந்தை கிழக்கு பிரதேசத்தில் மக்களின் கால்நடை வாழ்வாதாரங்கள் இரவோடு இரவாக இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்படுவதாகவும், மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் நீர் இறைக்கும் இயந்திரங்கள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு வருவதாகவும் எமது செய்தி சேவைக்கு பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த சம்பவங்கள் தொடர்பில் பிரதேச பொலிஸ் நிலையமான நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்ய செல்லும் வேளை பொலிசாரினால் தங்களின் முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்படாமல் தாங்கள் குறித்த இடத்திற்கு வருகைதந்து பார்ப்பதற்கு தமக்கு எரிபொருள் இல்லை என்றும் தம்மை போலீசார் திருப்பி அனுப்புகின்றனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

இதேவேளை 4/5 நாட்கள் கடந்த நிலையில் தான் முறைப்பாட்டை போலீசார் ஏற்றுக்கொள்கின்றனர் என்றும் தெரிவித்த பிரதேச மக்கள் , இரவு நேரங்களில் இடம்பெறும் திருட்டு சம்பவ நபர்களுக்கு பொலிசாரும் உடந்தையாக இருக்கின்றனரா என்று அதிருப்தி வெளியிட்டுள்ளனர்

Leave A Reply

Your email address will not be published.