மாணவிகள் துஸ்பிரயோகம் மேலும் 3 மாணவர்களை தேடி பொலீஸ் வலைவிரிப்பு!

0 646

முல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம் மேலும் 3 மாணவர்களை தேடி பொலீஸ் வலைவிரிப்பு!

முல்லைத்தீவில் பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலீசார் வலைவிரித்துள்ளார்கள்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் முதற்கட்டமான பொலீஸ் நடவடிக்கை முல்லைத்தீவில் உயர்தரத்தில் கல்விகற்று வரும் பாடசாலை மாணவி துஸ்பிரயோகம் மற்றும் மாணவிகளின் நிர்வாண காணொளிகள் வைத்துள்ள குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 5 மாணவர்கள் முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

பெண்பிள்ளைகளை பெற்றோர்களே உங்களுக்கான அறிவுரை காணொளியினை முழுமையாக கேழுங்கள்

முல்லைத்தீவு நகரப்பகுதியில் பிரத்தியேக வகுப்பு கொடுக்கும் (கணிதபாடம்) ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த 18.06.2022 அன்று முல்லைத்தீவு பொலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட குறித்த மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் சம்மந்தப்பட்ட 5 உயர்தர மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

பிரத்தியேக வகுப்பு என வீடுகளில் சென்று கணிதபாடம் கற்பித்துவந்த  அபிவிருத்தி உத்தியோகத்தராக அண்மையில் தெரிவான குறித்த சந்தேக நபர் முல்லைத்தீவு நகரில் உள்ள முதன்மை பாடசாலை ஒனறில்  ஆசிரியராக நியமனம் பெற்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மாணவர்கள்,மாணவிகளின் வீடுகளுக்கு சென்று பிரத்தியேகமாக காணிதபாடம் கற்பித்துவந்துள்ளார்.

பிரத்தியேக கணித பாடம் கற்பிற்கும் ஆசிரியரால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முல்லைத்தீவு பொலீசரால் செல்வவுரம்,சிலாவத்தை,உண்ணாப்பிலவு,கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்கள் கடந்த 20.06.222 அன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள


இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான  மாணவியின் பாடசாலை நண்பன் 18 அகவையுடைய கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த 21.06.2022 அன்று முல்லைத்தீவு பொலீசாரால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இவர் தனது நண்பியான பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படம் எடுத்து பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும்  பகிர்ந்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளார்கள்

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த 23.06.2022 அன்று சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் இவரையும் எதிர்வரும் 30.06.2022 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறான பாதிக்கப்பட்ட மாணவிகள்தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலீசார் ஆறு மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவர்ளை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார்கள் 

சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலீசார் தெரிவித்துள்ளார்கள். குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலீசார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30.06.2022 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.