கரிப்பட்டமுறிப்பு பாடசாலையில் சிறப்பாக இடப்பெற்ற சர்வதேச யோகா தினம்

0 33

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 21.06.2022 அன்று  முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது

கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் ந.சர்வேஸ்வரநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பாடசாலையில்  யோகா பயிற்ச்சி பெற்ற ஆசிரியர் மாணவர்களின் விசேட ஆசனங்கள் கண்காட்சியும் யோகா பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது

நிகழ்வில் மனவளக்கலை யோகாவும் மாணவர் மாண்பும் எனும் தலைப்பில் துணுக்காய் வலயக்கல்வி பணிமனையின் முன்னாள் வலயக்கல்வி பணிப்பாளரும் யோகா யாழ் மண்டல துணைத்தலைவருமான பேசிரியர் அ.வேதநாயகம் அவர்கள் சிற்ப்புரை நிகத்தினார்

நிகழ்வில்   துணுக்காய் வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர் 

Leave A Reply

Your email address will not be published.