மண்ணெண்ணைய் – போராட்டத்தில் குதித்த முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள்!

0 33

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள் எரிபொருளை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று 26.05.2022 முன்னெடுத்துள்ளார்கள்.

மண்ணெண்ணைய் இல்லாத நிலையினால் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் கடற்தொழில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணையினை பெற்றுத்தரகோரி ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்துள்ளார்கள்.

குhலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அலுவலகம் உடாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரை சென்றடைந்து மாவட்ட செயலகத்திற்க முன்னால் கடற்தொழிலாளர்கள் மண்ணெண்ணையினை பெற்றுத்தரகோரி கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.

இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்கள் ஆர்ப்பாட்ட காரர்களை உள்ளே அழைத்து கடற்தொழிலாளர்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஏற்றுக்கொண்டுள்ளார்.
சுhலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான மீனவர்கள் முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு,நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே எமது மீனவர்கள் தென்னிலைங்கையில் இருந்து வருகை தந்து தொழில் புரியும் மீனவர்களுக்கும் எரிபொருள் விநிNயுhகம் நடைபெற்று வருகின்றது.

இருந்த போதிலும் இவ் எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருளானது எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை அத்துடன் கடந்த 08.05.20222 அன்று தொடக்கம் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் குறிப்பாக மண்ணெண்ணைய் வரவில்லை இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது அத்துடன் விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவிலை எதிர்நோக்கியுள்ளனர்.

எனவே தயவு செய்து மது மீனவ மக்களின் இந்த நிலையினை கருத்தில் கொண்டு அவர்களின் தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு மீனவர்கள் சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

இதன்போது மீனவர்கள் தமது வாழ்வாதாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்
கடந்த 20 நாட்களாக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மண்ணெண்ணைய் கிடைக்காத நிலையில் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாது முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 2ஆயிரம் மீனவர்கள் வெளியிணைப்பு இயந்திரங்கள் மூலம் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள்.

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வாங்கவேண்டிய நிலை ஒரு படகிற்கு எவ்வளவு எண்ணெய் என்பதை உறுதிப்படுத்தி இரண்டு நாட்களுக்குள் வழங்கவேண்டும்.
இன்று ஒரு நாள் நித்திரைகொண்டு எழும்பும்போது பயத்துடன் எழும்பவேண்டியதாக இருக்கின்றது என்ன பொருளுக்கு விலையேறுகின்றது என்று தெரியாத நிலை பெற்றோலுக்கு விலை ஏற்றம் டீசல் விலையேற்றம் அத்திய அவிசய பொருட்கள் விலையேற்றத்தினால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இன்று பல குடும்பங்கள் சாப்பாடு இல்லாத நிலையில் காணப்படுகின்றது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வினை வழங்கவேண்டும்.

கரைவலை வளைக்கும் சம்மாட்டிமார் இன்று ஒரு மாதமாக கரைவலை வளைக்கமுடியாத நிலை ஒரு சம்மாட்டியின் கீழ் 30 பேர் தொழில் செய்கின்றார்கள் எல்லாம் விலையேற்றம் இன்று தொழில் எல்லாம் கேள்விக்குறியாகன நிலையில் காணப்படுகின்றது.
கரைவலை தொழில் செய்யும் தொழிலாளர்கள் 1500 பேர் வரை காணப்படுகின்றார்கள் இவர்களிளன் குடும்ப நிலையினை எண்ணிப்பாருங்கள்.

இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்து தொரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் நேற்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அவர்கள் தiiமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணைத்தட்டுப்பாடு தொடர்ச்சியாக இருக்கின்றது.
மீனவகுடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது இந்த விடையம் தெரியப்படுத்தியுள்ளோம்.

எரிபொருள் விநியோகம் செய்துள்ள பிராந்திய முகாமையாளருடன் இன்று கதைத்துள்ளோம் இன்று இரண்டு லோட் மண்ணெண்ணைய் அனுப்புவதாக உறுதிமொழிகொண்டுள்ளார்கள்.
இலங்கையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காணப்படுகின்றது மொத்தமாக 320 மெற்றிக்தொன்தான் இருக்கின்றதாம்.
நேற்று நடைபெற்ற மாவட்ட செயலக அதிகாரிளின் கூட்டங்களில் மாவட்ட செயலக அதிகாரிகளால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களின் கோரிக்கையினை கடற்தொழில் அமைச்சுக்கும் எரிபொருள் சக்த்தி அமைச்சிற்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.