ஊரடங்கு நீடிப்பு-துப்பாக்கி சூட்டு உத்தரவு-தேவையற்ற பயணங்களை தவிருங்கள்!

0 219

நாடளாவிய ரீதியாக தற்போது அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்னிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் வீதிகளில் நடமாடித்திரிவதையும் சந்திகளில் நிற்பதையும் அவதானிக்க முடிந்துள்ளதாக பொலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்

இராணுவத்தினர் வீதி கடமைகளில் நின்று அவசியமற்ற பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கிவருவதுடன் தற்போது பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்னிலையில் தேவையில்லாத வேலைகளை தவிர்த்து வாருங்கள் எங்கு தமிழர்கள் மீது சட்டத்தினை திணிக்கலாம் என ஒரு கூட்டம் காத்திருக்கின்றது அவற்றுக்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக்கொடுக்காதீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.