முல்லைத்தீவு பதிவு படகு திருகோணமலை மீனவர்கள் 6 பேர் இந்தியாவில் கைது!

0 52

முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மீன்பிடி படகு ஒன்றுடன் திருகோணமலையினை சேர்ந்த பெரும்பான்மை மீனவர்கள் 6 பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைதுசெய்துள்ளார்கள்.

கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை மீனவர்கள் 6 பேர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டம் கொடியகரை அருகே இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 6 பேரும் காரைக்கால் தனியார் துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.