3ம் வட்டாரம் முள்ளியவளை தெற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாரம்பரிய கோவலன் நாட்டுக் கூத்துக் கலைஞர் சமூக சேவகர் சுப்பையா குலசிங்கம் (உருத்தி) 29.04.2022 அன்று காலமானார்
அன்னார் சுப்பையா பகவதி தம்பதிகளின் அன்பு மகனும் வேலுப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் உருக்குமணியின் அன்புக் கணவரும் அமரர் மகாதேவகுலசிங்கம் மகாலட்சுமி துரைராசசிங்கம் கணேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் துரைசிங்கம் கமலாதேவி தர்மலிங்கம் (அதிபர்) சுகுனாவதி சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும் அருள்மொழி அனார்கலி கலையரசி(லண்டன்) அரவிந்தன் (பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் தர்மராசா மோகன்ராஜ் (இ.போ.ச ஊழியர்) சிறீகரன்,சுரேகா ஆகியோரின் அன்பு மாமனாரும் அஸ்வினி கௌரீசன் டிசானி ஹரிஸ் ஹரிணி அஸ்வின் தஸ்வின் பவின் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை முள்ளியவளையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 2 மணியளவில் கற்பூரப்புல் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் கலைஞர்கள் அனைவரும் கேட்டுக் கொள்ளுமாறு அறியத்தருகிறோம். -தகவல் குடும்பத்தினர்