முல்லைத்தீவு செல்வபுரம் குடும்பம் உள்ளிட்ட தமிழகம் சென்ற 19 பேரின் விபரங்கள்!

0 323

இலங்கை முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை பகுதியில் இருந்து 19 பேர் அகதிகளாக இன்று மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

இலங்கை முல்லைத்தீவு செல்வபுரத்தைச்சேர்ந்த சி.ஈஸ்வரன்(38) அவரது மனைவி சுசிகலா(32) மகன்கள் துவாரகன் (12), நவீன் (11), ஆகியோருடன் நாவல்துறையைச் சேர்ந்த சி.கமலேந்திரன் (41), கப்பல்துறையைச்சேர்ந்த எல்.மைக்கேல்ஸ்காம்ஸ் (32) ஜெ.இக்னேஷ்மேரி (44), வவுனியா பாலமோட்டிநப்பியைச்சேர்ந்த ஐ.கோடீஸ்வரன் (26), அவரது மனைவி கஸ்தூரி (20) உட்பட 9 பேரும் மன்னார் மாவட்டம் பேசாளைக்கு வந்து அங்கு படகுக்கட்டணமாக தலா 25 ஆயிரம் கொடுத்து நேற்று இரவு படகில் புறப்பட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு ராமேஸ்வரத்தைஅடுத்த கோதண்டராமர் கோவில் கடற்கரைக்கு வந்துசேர்ந்தனர்.

அங்கு ஆட்டோ ஒன்றில் புறப்பட்டு அதிகாலை 9 மணிக்கு மண்டபம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் ஸ்டேனுக்கு வந்து சேர்ந்தனர்.
இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த 10 பேர் அகதிகளாக படகில் ராமேஸ்வரம் வந்தபோது தனுஷ்கோடியை அடுத்த 1ஆம் மணல்திட்டில் இறக்கி விடப்பட்டனர்.

அவர்களை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு மண்டபம் அழைத்து வந்தனர். இலங்கை திருகோணமலை உப்புவெளி சேர்ந்த என்.நிரோசன் அவரது மனைவி சுதா (34), மகள் விதுஷ்டிகா (13), மகன்கள் அஜய் (12), அபிநயன் (2), மற்றும் பி.டிலக்சன் (26), அவரது மனைவி டிலக்சனா (21), மற்றும் ஸ்ரீகரன் (27), அவரது மனைவி பரீனா (24), மகள் சின்சிகா (5) ஆகியோர் உட்பட 10 பேர் பேசாளை வந்து அங்கிருந்து படகு கட்டணமாக தலா 25 ஆயிரம் கொடுத்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடிக்கு வரும் வழியில் அவர்களை அரிச்சல்முனை அருகே உள்ள ஒன்றாம் மணல் திட்டில் இறக்கி விட்டு படகு திரும்பிச் சென்றது.

மணல் திட்டில் தவித்த அவர்களை தனுஷ்கோடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து சென்று மீட்டு மண்டபம் அழைத்து வந்தனர்.
உளவுத்துறை, குடியுரிமை துறை போலீஸார் விசாரணைக்கு பின்னர் 19பேரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.