இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இலங்கை அரசாங்கத்தின் கையில் நிதியில்லாததால், கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது.
மக்கள் போராட்டங்கள் வெடித்தாலும் இன்னும் பட்டிணி என்னும் நிலைக்கு இலங்கையில் உள்ள மக்கள் செல்லவில்லை,மருந்து தட்டுப்பாடு,உணவுத்தட்டுப்பாடு வரும் என ஆய்வாளர்களால் எதிர்வு கூறப்பட்டாலும் தொழில் செய்து வாழும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
வடக்கு கிழக்கு பகுதிகளை சேர்ந்த தமிழ்மக்களின் நிலவளம்,கடல்வளம், என அனைத்தும் இருக்கின்றது சிக்கலான சூழ்நிலையில் வாழக்கற்றுக்கொண்ட மக்கள்,
2004 ஆம் ஆண்டு சுனாமி தாக்கத்தில் பல உயிரிர்கள் சொத்துக்கள் அழிந்தும் அந்த இழப்பில் இருந்து மீண்டெழுந்த மக்கள் 2009 ஆம் ஆண்டு வரை போர் நடைபெற்ற காலப்பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைத்து சொத்துக்களையும் இழந்த நிலையில் கச்சைத்துண்டுடன் செட்டிகுளம் முகாம் சென்று மீண்டு இன்று வளர்ந்து கொண்டிருக்கும் மக்கள்.
இவ்வாறான வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள் எல்லா சூழ்நிலையிலும் வாழக்கற்றுக்கொண்டவர்கள், வளர்ந்துவரும் தொழில்நுட்பம் நாகரீகத்திற்கு ஏற்றவகையில் மாற்றிக்கொண்டதால் சில பொருட்களின் தட்டுப்பாடு இறுக்கமாகத்தான் காணப்படுகின்றது என்ன என்று சொல்வது என்று தங்கள் வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்லும் மக்கள் எங்கள் மண்களில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
தற்போது நாட்டைவிட்டு இந்தியாவிற்கு செல்லும் மக்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் இந்தியாவில் முகாம்களில் தமிழக அரசின் நிவாரணத்தினை பெற்று கஸ்ரம் தெரியாமல் வளர்ந்து தங்கள் சொந்த நாட்டிற்கு வந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள்.
இவர்களால் இங்கு வாழமுடியாது என்று சொல்வது கஸ்ரமாகத்தான் இருக்கின்றது.
அரசாங்கம் வீடு கட்டிக்கொடுத்திருக்கின்றது,சமூர்த்தி நிவாரணம் கொடுக்கின்றது,இவ்வாறு சில வசதிகளை செய்துகொடுத்தாலும் முயற்சி இல்லாத மக்கள் இலங்கை நாட்டில் வாமுடிய நிலையில் நாட்டைவிட்டு தப்பி செல்கின்றார்கள்.
மன்னார்பேசாலை தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த 12 நபர்கள் தொடர்பில் பேசாலை பகுதி கடற்படை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடற்படையினர் குறித்த நபர்களை சோதனைக்கு உட்படுத்தியதன் பின்னர் பேசாலை போலீசாருக்கு பாரப்ப்படுத்திய நிலையில் போலீசார் இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது
திருகோணமலையில் இருந்து மடு திருத்தலத்திற்கு வந்ததாகவும் பின்னர் பேசாலைக்கு வந்து தனியார் விடுதி ஒன்றில் தங்கி உள்ள நிலையில் கடற்படையினர் விசாரணைக்கு உட்படுத்தி பேசாலை போலீஸ் நிலையத்தில் கை அளித்ததாக தெரிவித்துள்ளனர்
இதனையடுத்து போலீசார் இவர்களிடம் வாக்குமூலத்தை பெற்று அவர்களது சொந்த ஊரான திருகோணமலைக்கு இரவு அனுப்பி வைத்ததாக பேசாலை போலீசார் தெரிவித்தனர்