முல்லைத்தீவில் மேலும் 16 பேருக்கு வேலைவாய்ப்பு நியமனம்!

0 54

ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தை நோக்கி எனும் தொனிப்பொருளில் ஒரு லட்சம் வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கான நியமன கடிதங்கள் 26.10.21 இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

முல்லைததீவில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான தோழர் குலசிங்கம் திலீபன், கரைத்துறைபற்று பிரதேசசபை உறுப்பினர் சயந்தன், மாந்தை கிழக்கு பிரதேசசபை உறுப்பினர் ஜெயரூபன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் அருள்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன்
நியமனம் பெற்ற 16 பேருக்கான நியமன கடிதங்களையும் வழங்கிவைத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.