செம்மலை குளத்தில் மீன்பிடிக்க சென்றவர் உடலமாக மீட்பு!

0 480

முல்லைத்தீவு செம்மலைப்பகுதியில் அமைந்துள்ள பெரிகுளத்தில் மீன்பிடிக்க சென்ற குடும்பஸ்தர் ஒருவர் சுழியில் அகப்பட்டு உயிரிழந்த சம்பவம அந்த கிராமத்தினை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

13.10.21 நேற்று மாலை செம்மலைப்பகுதியில் உள்ள பெரியகுளத்தில் மீன்பிடி தொழிலுக்காக சென்ற 34 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவபாதம் ஸ்ரீசங்கர் என்ற குடும்பஸ்தர் குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளை சுரியில் அகப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.


நீண்ட நேரமாகியும் மீன்பிடித்தவரை காணவில்லை என உறவினர்கள் தேடி சென்றபோது நீரில் மூழ்கிய நிலையில் அவரைமீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை கொண்டுசென்றுள்ளார்கள்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது இவரது உடலம் மாவட்ட மருத்துவமனையின்பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரோத பரிசோதனைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

Leave A Reply

Your email address will not be published.