வடகடலில் நுளைந்த இரு படகுகளும் 23 தமிழக மீனவர்களும் கைது!

0 8

இலங்கையின் வடக்கு கடற்பரப்பிற்குள் நுழைந்த 23 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

13.10.21 நேற்று இரு படகுகளில் வந்த 23 மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் உள் நுழைந்த சமயம் கைது செய்யப்பட்ட குறித்த மீனவர்கள் இன்றுகொரோனா பரிசோதனையின் பின்னர் காரைநகரில் உள்ள இடைத்தங்கல் முகாமிற்கு விடப்பட்டு 14 நாட்களின் பின்பே சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வடமராட்சி கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கும் பருத்தித்துறை மீனவர்களுக்கும் இடையில் தாக்குதல் சம்பவம்ஒன்றும் பதிவாகியுள்ளது இன்னிலையில் இந்திய மீனவர்களின் தொடர் அத்து மீறலைக் கண்டித்து எதிர் வரும் 17ஆம் திகதி கடலில் இறங்கிப் போராட்டம் நடாத்த கூட்டமைப்பு அழைப்பு விட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.