மீனவர் வாழ்வாதார போராட்டம் முல்லைத்தீவில் தொடக்கம்!

0 5

இந்திய இழுவை நிலைப் படகு அல்லது றோலர் மீன்பிடி முறை கடற்தொழில் மற்றும் நீரியல்வள சட்டத்தின் கீழ் 2016ம் ஆண்டு எம். ஏ. சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட சட்டதிருத்ததின் பின்னர் முற்றாக தடைசெய்யப்பட்டிருந்தாலும் அது நடைமுறையில் இன்னமும் முழுமையாக செயற்படுத்தப்படாதுள்ளது.

குறிப்பாக இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடி முறையின் காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

றோலர் தடைச்சட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரி மீனவர் வாழ்வாதார போராட்டம் என்ற தொனிப்பொருளில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஆகவே, மீனவர்களுக்கு நீதி கோரி முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல்வழி கண்டனப்போராட்டமொன்றை வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆக்டொபர் 17ம் திகதி நாடாத்தவுள்ளோம்.

நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்றை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கிணங்க இப் போராட்டம் நடத்தப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்களினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.