நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலையில் இலங்கை மக்கள்!

0 29

சுற்றிவர கடலால் சூழப்பட்டுள்ள இலங்கை திருநாட்டின் பொருளாதரத்தில் ஆட்டம் கண்டுள்ள நிலையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் அத்திய அவசிய பொருட்களின் விலை ஏற்றத்தினால் பாமரமக்கள் தொடக்கம் நகரபுற மக்கள் வரை பல்வேறு பொருட்களின் விலை வாசி உயர்வினால் செய்வதறியாது தவித்து வருகின்றார்கள்.

பலர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்ற எண்ணத்திலேயே காணப்படுகின்றார்கள் அதற்கும்
வழியில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

தற்போது கோதுமை மா எரிவாயு பால்மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் உயர்ந்த நிலையில்இதுவரை உயர்த்தப்படாத அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளையும் அரசாங்கம் உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.இதன்படி அடுத்த ஒரு மாதத்திற்குள் எரிபொருள் நீர் மற்றும் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்

பாரிய பொருளாதார சவாலை எதிர்கொண்டுள்ள இலங்கை நாட்டின் உயர் பதவியில் இருப்பவர்கள்எவ்வாறும் வாழ்ந்து கொள்ளலாம் ஆனால்நாhளாந்தம் கூலித்தொழில் செய்யும் மக்கள் எவ்வாறு வாழ்வதுஎன்றுதெரியாத நிலையில் தவித்து வருகின்றார்க்ள்

இதுவும் கடந்து செல்லும் என்று சொல்லிவட்டு செல்கின்றார்கள் இதுதான் இன்றையமக்களின் நிலை…

Leave A Reply

Your email address will not be published.