அன்றைய அருணா இசைக்குழுவின் பாடகி ஜெயந்தி காலமானார்!

0 25

1980 களில் யாழ் இசைக்குழுக்களில் குறிப்பிடத்தக்க பாடகியாக திகழ்ந்த திருமதி ஜெயந்தி லண்டலில் (06.10.2021 ) புதன்கிழமை அன்று காலமானார்

கலைஞர்களின் இழப்பு பேரிழப்பாகும் ஒவ்வொரு கலைஞர்களும் தமிழர்களின் பொக்கிசமாக காணப்படுகின்றார்கள்அவர்களின் திறமைகளை அடுத்து வரும் தலைமுறையினர் உணர்ந்து செயற்படவேண்டும் உலகை இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா பலரை விட்டுவைக்கவில்லை இந்த கால கட்டத்தில்பல கலைஞர்கள் கொரோனா தொற்றினாலும் மற்றும் நோய்வாய்ப்பட்டும் உயிரிழந்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில் ஜெயந்தி அக்காவும் இணைந்து கொண்டுள்ளார் முன்பொருகாலம் யாழ்ப்பாணத்தில் அனைத்து இரசிகர்கள் இடத்திலும் பேசப்படும் இசைக்குழுவாக அருணா இசைக்குழு காணப்பட்டுள்ளது.

அருணா இசைக்குழுவின் பாடகி கங்காவின் மூத்தசகோதரியாவார் யாழ்நகரில் இசைக்குழுக்களில் பெண்பாடகிகள்சொற்பமாக விரல்விட்டு எண்ணுமளவிற்கு இருந்த காலங்களில் பாடகியாக திகழ்ந்தவர் என்பது பெருமைக்குரிய விடயம்

அத்துடன் மேடைநாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றவராவார் . பின்னர் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்தவேளையிலும்இசை மேடைகளில் மங்கள விழாக்களில் தன் பாடல்திறமைகளை வெளிப்படுத்தியவர் அன்னாரின் மறைவு ஈழத்து கலையுலகிற்கு இழப்புமிக்கதொன்றாகும்

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலைக்கூறிக்கொண்டு அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்

Leave A Reply

Your email address will not be published.