பிரான்சில் இருந்து பார்சல் சேர்விஸ்-பணம் பறிக்கும் கும்பல்!

0 27

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள் அங்கேயே பணம் கட்டி தாயகத்தில் உள்ள உறவுகளுக்குபொதியினை அனுப்புகின்றார்கள் இவ்வறான நிலையில் தாயகத்தில் உள்ள உறவுகளிடம் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் அதிர்ச்சியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பொதியினை அனுப்பிவைப்பவர்கள் அது வீடுவரை கொண்டுசென்று கொடுக்கும்பணத்தினையும் கட்டிவிடுகின்றார்கள் இன்னிலையில் வடக்கில் பலரிடம் தொடர்புகொண்டு உங்களுக்கு வெளிநாட்டு பொதி வந்துள்ளது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புங்கள் என்று தொலைபேசி இலக்கம்ஒன்றில் அழைப்பு விடுத்து இரண்டு நாட்களுக்குள் தொலைபேசியினை அனைத்துவிடுகின்றார்கள் வங்கி கணக்கினை குறுந்தகவல் ஊடாக அனுப்பிவிடுகின்றார்கள்

இதனை நம்பி வெளிநாட்டில் இருப்பவர்களின் தொடர்பினை சரியாக பேணாத சிலர் குறித்த
வங்கி கணக்கிற்கு குறித்த தொகை பணத்தினை அனுப்பி ஏமாந்துள்ள சம்பவங்கள் வடக்கில் பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் இது தொடர்பான முறைப்பாடு ஒன்று பதிவாகியுள்ளது.

வெளிநாட்டு பொதி வந்துள்ளது என அழைப்பு எடுத்த ஒருவர் வங்கி கணக்கில் 19 ஆயிரத்தி 300 ரூபா பணத்தினை போடுங்கள்என தெரிவித்து அடுத்த நாள் தொலைபேசியினை அணைத்து வைத்துள்ளார்.வெளிநாட்டு பொதி வரும் என எதிர் பாத்திருந்தவர் வங்கி கணக்கில் பணத்தினை போட்டுவிட்டு குறித்ததொலைபேசிக்கு அழைப்பு எடுத்தால் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்து 06.10.21 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நபர்
வங்கி முகாமையாளரிடமும் வங்கி கணக்கு தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீசார் குறித்த வங்கி கணக்கில்
அன்றைய நாளில் 6 பேரிடம் இருந்து இருபதாயிரம் வரையிலான பணம் வைப்பிலடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொதி சேவை செய்யும் நபர்களுக்கோ நிறுவனத்திற்கோ பொதியினை வழங்கும்
இடம் தொலைபேசி இலக்கம் என்பன வழங்கப்படுகின்றன பொதிக்கான அனைத்து கட்டணங்களும்வெளிநாட்டில் பொதியினை அனுப்புபவர்களால் வழங்கப்படும் நிலையில் இவ்வாறான நிலையில் மோசடி சம்பவங்கள் மக்களை அச்சத்திற்கு உட்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.