முல்லைத்தீவு  நாயாறு பகுதியில் இதுவரை 53 பேருக்கு கொரோனா தொற்று!

0 148

கடந்த 7 ம் திகதி முல்லைத்தீவு  நாயாறு பகுதியில் வாடி அமைத்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டிருந்த புத்தளம், கறுக்குப்பனை, வெண்ணப்புவ பகுதிகளை சேர்ந்த 5 கடற்றொழிலாளர்களுக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து முல்லைத்தீவு நாயாறு பகுதி தனிமைப்படுத்தபட்டது, அங்கு மேற்கொண்ட பிசிர் பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன அதன் படி

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இதுவரை 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது,  முல்லைத்தீவு நாயாறு பகுதியில் பாரிய சிக்கலை தோற்றுவிக்கும் தென்பகுதி மீனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது,

இன்று வெளிவந்த பிசிர் முடிவுகளின் படி முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 34 மீனவர்களுக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்படுள்ளது,

முல்லைத்தீவு – நாயாறு பகுதியில் வெளிமாவட்டத்தை சேர்ந்த சுமார் 700 வரையிலானோர் வாடிகள் அமைத்து கடற்றொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.